புதிய ஹேட்ச்பேக், செடான் கார்களை அறிமுகம் செய்யும் டாடா

By Saravana

"புராஜெக்ட் ஃபால்கன்"... இதுதான் டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ள புதிய கார்களுக்கான அதிரடி திட்டம். முற்றிலும் புதிய மாடல்களை இந்த திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் முதலில் 2 புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. விஸ்டா அடிப்படையிலான புதிய ஹேட்ச்பேக் காரும், மான்ஸா அடிப்படையிலான செடான் காரும்தான் முதலாவதாக வர இருக்கின்றன.

மாற்று மாடல்கள்

மாற்று மாடல்கள்

விஸ்டா, மான்ஸா கார்களுக்கு மாற்றாக இந்த புதிய கார்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. மேலும், டிசைனில் சிறிய வித்தியாசங்களுடன் இந்த கார்கள் வர இருப்பதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபால்கன் 4

ஃபால்கன் 4

ஃபால்கன் 4 என்ற குறியீட்டு பெயரில் புதிய ஹேட்ச்பேக் கார் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸீட்டா காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட்டின் 1.3 லி மல்டிஜெட் எஞ்சினுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.

ஐரோப்பிய டிசைன்

ஐரோப்பிய டிசைன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் மையத்தில்தான் புதிய ஃபால்கன் 4 ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐரோப்பிய மார்க்கெட்டில் உலவும் ஹேட்ச்பேக் கார்களின் டிசைன் தாத்பரியம் இந்த புதிய காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

ஃபால்கன் 5

ஃபால்கன் 5

இது மான்ஸா காருக்கான புதிய மாற்று மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரிலும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்கள்

எஞ்சின்கள்

இந்த 2 புதிய கார்களிலும் பயன்படுத்தப்படும் எஞ்சின்கள் டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வரும் புதிய தலைமுறை எஞ்சின்களாக இருக்கும்.இவை, நவீன தொழில்நுட்ப அம்சங்களையும், அதிசக்தி வாய்ந்ததாகவும் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்னதாக முதலில் செடான் காரும், அடுத்து ஹேட்ச்பேக் காரும் வர இருக்கிறது.

Most Read Articles
English summary
‘Project Falcon' is the codename being used by Tata Motors to designate its project that will bring the first totally new vehicle from the Indian manufacturer in years. The first two products originating from Project falcon will be a hatchback and a compact sedan, both of which will be on display at the Indian Auto Expo in Feb. 2014.
Story first published: Saturday, November 9, 2013, 10:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X