இனி தரமே தாரகமந்திரம்... டாடா மோட்டார்ஸின் அதிரடி ப்ளான்!!

By Saravana

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார் மார்க்கெட்டில் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்து கிடுகிடுவென பின்னோக்கி சென்று வருகிறது.

இந்த நிலையில், விற்பனை சரிவை தடுத்து நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. தரத்தை தாரக மந்திரமாக கொண்டு தனது எதிர்கால திட்டங்களை அந்த நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

காரணங்கள்

காரணங்கள்

விற்பனை சரிவுக்கான கீழ்கண்ட மூன்று காரணங்களை டாடா மோட்டார்ஸ் தலைவர் கார்ல் ஸ்லிம் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளார்.

  • தர குறைபாடுகள்
    • மேம்படுத்தப்படாத தற்போதைய மாடல்கள்
      • டாக்சி முத்திரை
      • கார்ல் ஸ்லிம் வியூகம்

        கார்ல் ஸ்லிம் வியூகம்

        முதலில் மூன்று குறைபாடுகளையும் களைவதற்கான முயற்சிகளை கார்ல் ஸ்லிம் அதிரடியாக செயல்படுத்த உள்ளார்.

        முதலாவது...

        முதலாவது...

        இப்போது டாடா மோட்டார்ஸ் 1,200 சப்ளையர்களிடமிருந்து பாகங்களை பெறுகிறது. ஒரு பாகங்களை பல்வேறு சப்ளையர்களிடமிருந்து டாடா மோட்டார்ஸ் பெறுகிறது. எனவே, தரக் குறைபாடு உள்ள பாகங்களை கண்டறிவதிலும், கண்காணிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளில் சப்ளையர்களின் எண்ணிக்கையை 300- 400 ஆக குறைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

        மாடுலர் பிளாட்ஃபார்ம்

        மாடுலர் பிளாட்ஃபார்ம்

        தரமான தயாரிப்புகளை வழங்கும் விதத்தில் அட்வான்ஸ்டு மாடுலர் பிளாட்ஃபார்மில்(ஏ.எம்.பி.,) கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பிளாட்பார்மில் வெவ்வேறு ரக கார்களை டிசைன் செய்ய முடியும் என்பதால் வடிவமைப்புக்கான செலவீனமும் மிச்சப்படுத்தலாம். 2015ம் ஆண்டுக்கு பின்னர் வரும் டாடா தயாரிப்புகள் இந்த பிளாட்பார்மில்தான் தயாரிக்கப்படும். மொத்தம் 8 கார்களை இந்த புதிய பிளாட்ஃபார்மில் டாடா தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

        சர்வதேச தரம்

        சர்வதேச தரம்

        இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் தனது பிராண்டு இமேஜை மாற்றி, தரமிக்க தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors is clearly trying to step up it's game to keep up with rivals, become profitable and to create an image that matches that of any international players. It's not just the Nano that is receiving an image makeover, but all of Tata Motors.
Story first published: Tuesday, September 10, 2013, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X