இந்தியாவின் நம்பகமான கார் பிராண்டு எது தெரியுமா? சாட்சாத் நம்ம நானோதான்!

இந்தியாவின் நம்பகமான ஹேட்ச்பேக் கார் பிராண்டு டாடா நானோ என்று பிராண்டு நம்பகத்தன்மை குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் இந்தியாவின் நம்பகமான பிராண்டுகள் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது.

பல்வேறு துறைகளில் நம்பகத்தன்மையான பிராண்டை தெரிவு செய்யும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 211 வகைகளில் 19,000 பிரத்யேக பிராண்டுகளில் 1,100 பிராண்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில், ஹேட்ச்பேக் கார் பிரிவில் மிகுந்த நம்பகமும், கவர்ச்சிகரமான பிராண்டாக டாடா நானோ கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டாடா மோட்டார்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.

மதிப்பு

மதிப்பு

கொடுக்கும் பணத்திற்கு சிறந்த மதிப்பு கொண்ட பிராண்டாக நானோ இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

நானோ காரை பிரபலப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக டாடா மோட்டார்ஸ் அதிகாரி டெல்னா அவாரி தெரிவித்துள்ளார்.

 அம்சங்கள்

அம்சங்கள்

4 பேர் செல்வதற்கான வசதியுடன் நகர்ப்புறத்துக்கு ஏற்ற காராக நானோ விளங்குகிறது. மேலும், பெண்களுக்கு ஓட்டுவதற்கு ஏற்ற சிறிய காராகவும், இரண்டாவது கார் வாங்குவோர்க்கான சிறந்த குட்டிக் காராகவும் நானோ விரும்பப்படுகிறது. அதிக மைலேஜ், குறைவான விலை, ஏராளமான வண்ணங்கள் ஆகியவையும் நானோவின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்.

 எஞ்சின்

எஞ்சின்

38 பிஎச்பி ஆற்றல் கொண்ட 624 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, சிஎன்ஜியில் இயங்கும் நானோ காரும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நம்பகமான கார் பற்றி...

நம்பகமான கார் பற்றி...

நம்பகமான காராக தெரிவு செய்யப்பட்டுள்ள நானோ காரில் இருக்கும் வசதிகள், எஞ்சின், வேரியண்ட்டுகளுக்கு இடையிலான ஒப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள ஆவல் பிறந்துவிட்டதா? இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary
Tata motors has announced, their Tata Nano has been coronated as The Most Trusted Brand in The Brand Trust Report Study-2013.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X