டாடா சஃபாரி ஸ்ட்ராம் - சிறப்பு பார்வை

கம்பீரமும், மிடுக்கும் கலந்த தோற்றம், சிறுத்தையை போன்று சீறிப் பாயும் திறன் கொண்ட எஞ்சின் என ஒரு உண்மையான எஸ்யூவியாக தென் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியிருக்கிறது டாடா சஃபாரி ஸ்ட்ராம். கடந்த 1998ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதலாம் தலைமுறை சஃபாரி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் எஸ்யூவி. தற்போது அதிக மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு சஃபாரி ஸ்ட்ராம் என்ற பெயரில் வந்துள்ளது.

வட இந்திய மார்க்கெட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட சஃபாரி ஸ்ட்ராம் 3 மாதங்களில் விற்பனையில் 3,000ஐ கடந்துவிட்டது. மேலும், 2,000 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தென் இந்திய மார்க்கெட்டுக்கு கொஞ்சம் லேட்டாக வந்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சஃபாரி ஸ்ட்ராம் விற்பனையில் நல்ல எண்ணிக்கைகளை பதிவு செய்யும் என்ற நம்பிக்கை டாடாவுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் சஃபாரி ஸ்ட்ராமில் இருக்கும் அம்சங்கள். அவை என்னென்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

ஒட்டுமொத்த வடிவமைப்பில் சஃபாரியை ஒத்திருந்தாலும், சஃபாரி ஸ்ட்ராமின் முன்புற வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்களை செய்துள்ளது டாடா டிசைன் டீம்.

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

கிரில், பருந்து கண் போன்ற வடிவமைப்புடன் ஹெட்லைட், பனி விளக்குகள் என அனைத்திலும் கை வைத்து அசத்தியிருக்கிறது டாடா. தவிர, முகப்பு கிரில்லின் மேல்புறத்தில் குரோம் பட்டையில் ஸ்ட்ராம் என்று ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (படத்தில் காணலாம்). இது லேண்ட்ரோவரின் தயாரிப்புகளை நினைவூட்டுகிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்திலும் முக்கிய மாற்றம் ஸ்டெப்னி டயர் காருக்கு அடிப்பாகத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது. மேலும், இரட்டை குழல் புகைப்போக்கி குழாய் கூடுதல் அம்சமாக கூறலாம். ரூஃப் ரெயில் கூடுதல் கெத்தை கொடுக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் வேரிகோர் ட'ர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140 பிஎஸ் பவரையும் 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

எலக்ட்ரானிக் ஷிப்ட்

எலக்ட்ரானிக் ஷிப்ட்

2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை எளிதாக மாற்றிக் கொள்ளும் வகையில் எலக்ட்ரானிக் ஷிப்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் திருகில் எளிதாக 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலிருந்து 4 வீல் லோ மற்றும் 4 வீல் ஹை என சாலைநிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

ஹைட்ரோஃபார்ம்டு சேஸிஸ்

ஹைட்ரோஃபார்ம்டு சேஸிஸ்

ஆரியா காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே ஹைட்ரோஃபார்ம்டு கட்டமைப்பு கொண்ட உறுதிமிக்க லேடர் சேஸிஸ்தான் சஃபாரி ஸ்ட்ராமுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சாலைநிலையிலும் சிறப்பாக செயல்படுவதோடு, அதிக உறுதித்தன்மை வாய்ந்தது.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடல் லிட்டருக்கு 14 கிமீ மைலேஜையும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடல் லிட்டருக்கு 13.2 கிமீ மைலேஜையும் தரும் என டாடா தெரிவிக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

புதிய டிசைன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம் மீட்டர் என அனைத்தும் அனலாக் மீட்டர்கள்தான்.

பார்க்கிங் சென்சார்

பார்க்கிங் சென்சார்

பார்க்கிங் சென்சார் சிஸ்டம் இருக்கிறது. காருக்குள் இருக்கும் ரியர் வியூ மிரரில் சிறிய திரை மூலம் காரை பின்னால் எடுக்கும்போது உதவிகரமாக இருக்கும்.

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

டில்ட் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டிருக்கிறது. கையால் தைத்த லெதர் கவரால் ஸ்டீயரிங் வீல் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை.

டர்னிங் ரேடியஸ்

டர்னிங் ரேடியஸ்

சஃபாரி ஸ்ட்ராம் வெறும் 5.4 மீட்டர் சுற்றளவுக்குள் திரும்பும் வசதியை கொண்டிருக்கிறது.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் மரவேலைப்பாடுகள் அலங்கரிக்கிறது. மேலும், பிளாஸ்ட்டிக்குகளின் தரமும் மேம்பட்டிருக்கிறது. கன்னாபின்னாவென்று இல்லாமல் அழகாக இருக்கிறது.

கியர் நாப்

கியர் நாப்

கைகளுக்கு இலகுவாகவும், லாவகமாகவும் இருக்கும் வகையில் கியர் நாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. லெதர் கவரும் போடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.

இடவசதி

இடவசதி

முதல் இரண்டு வரிசையில் தாராள இடவசதி இருக்கிறது. ஹெட்ரூம், லெக் ரூம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், மூன்றாவது வரிசையில் உயரமானவர்கள் அல்லது பருமனாக இருப்பவர்கள் சவுகரியமாக அமர இயலாது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் விஷ்போன் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. 1930ம் ஆண்டு முதன்முறையாக சிட்ரோவன் அறிமுகப்படுத்திய இந்த சஸ்பென்ஷன் சிஸ்டம் சஃபாரி ஸ்ட்ராமின் வீர தீர பராக்கிரமங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

4*2 எல்எக்ஸ் ரூ.9.95 லட்சம்

4*2 இஎக்ஸ் ரூ.10.85 லட்சம்

4*2 விஎக்ஸ் ரூ.12.58 லட்சம்

4*4 விஎக்ஸ் ரூ.13.80 லட்சம்

(பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

எமது எக்ஸ்ட்ரீம் டிரைவ் அனுபவத்தில் டாடா சொல்வது போன்று ஓர் உண்மையான எஸ்யூவி சஃபாரி ஸ்ட்ராம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால், ரூ.15 லட்சம் விலை கொண்ட இந்த காரில் குரூஸ் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருக்கிறது. மொத்தத்தில் உறுதியான எஸ்யூவியை விரும்புவர்களுக்கு சஃபாரி ஸ்ட்ராம் சிறந்ததாக இருக்கும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X