விஸ்டாவின் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் கார்: காட்சிப்படுத்திய டாடா

எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் விஸ்டாவின் பெர்ஃபார்மென்ஸ் கான்செப்ட் மாடலை புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த விஸ்டா டி90 அறிமுக விழாவின்போது டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது. பார்க்க படு அசத்தலாக இருக்கும் இந்த கான்செப்ட் மாடல் கார் விரைவில் உற்பத்தி நிலைக்கு செல்லும் அம்சங்களை கொண்டுள்ளது.

ஆஃப்ரோடு சாகசங்கள் மற்றும் அனைத்து சாலை நிலைகளிலும் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைப்பில் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் சாதாரண மாடலைவிட 25மிமீ கூடுதல் உயரத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை தருவது இதன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பேர் வீல்தான். மொத்தத்தில் படு கவர்ச்சியான அம்சங்களுடன் இருக்கிறது இந்த விஸ்டா எக்ஸ்ட்ரீம். பவர்ஃபுல் விஸ்டாவின் அதிக விலை கொண்ட வேரியண்ட்டாக விரைவில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

இந்த பவர் போதுமா?

இந்த பவர் போதுமா?

விஸ்டா டி90 கார் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த காரின் எஞ்சின் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பவர்ஃபுல் கார் என்பதோடு, ஆஃப்ரோடுகளில் பயன்படுத்தும் வகையில் இதன் சஸ்பென்ஷன் 25 மிமீ கூடுதல் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பேர் வீல்

ஸ்பேர் வீல்

பின்புற பம்பரில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், விஸ்டா டி90 எக்ஸ்ட்ரீம் ஒரு மினி எஸ்யூவி 'கெத்'துடன் காட்சி தருகிறது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பம்பர் வடிவமைப்பு

பம்பர் வடிவமைப்பு

முன்புறத்தில் அதிகம்பீர தோற்றத்தை தரும் வகையில் இதன் முன்புற கிரில் மற்றும் பம்பரில் மாற்றங்களை செய்து அசத்தியிருக்கிறது டாடா டிசைன் டீம்.

ஒரே கலர்

ஒரே கலர்

கன் மெட்டல் எல்லோ என்ற ஒரே ஒரு மஞ்சள் வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிராஸ்ஓவர் கார்

கிராஸ்ஓவர் கார்

இது கிராஸ்ஓவர் ரகத்தில் மினி எஸ்யூவிக்கு இணையான அம்சங்களுடன் வருகிறது.

Most Read Articles
English summary
After launching Vista D90 priced at Rs 5.99 Lac, Tata Motors also showcased a performance variant called D90 Xtreme concept, at Buddh International Circuit.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X