அடுத்தடுத்து தீப்பிடித்து எரியும் தெஸ்லா கார்கள்: வாடிக்கையாளர் பீதி

அடுத்தடுத்து தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக பாதுகாப்பான கார்களில் ஒன்றாக தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் காரை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

கிராஷ் டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகளில் அதிக புள்ளிகளை தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார் பெற்றது. இந்த நிலையில், கடந்த 6 வாரங்களில் மட்டும் 3 தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதால் வாடிக்கையாளர் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

முதல் கார்

முதல் கார்

கடந்த மாதம் 1ந் தேதி சியாட்டில் நகரில் தெஸ்லா எஸ் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பேட்டரி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் உலோகப் பொருள் மோதியதால் தீப்பிடித்ததாக கூறப்பட்டது. இந்த விஷயம் அமெரிக்க மீடியாக்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டன. இந்த காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 6.2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

இரண்டாவது சம்பவம்

இரண்டாவது சம்பவம்

கடந்த மாதம் 18ந் தேதி மெக்சிகோவில் இரண்டாவது தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்தது. குடிபோதையில் காரை ஓட்டி வந்தவர் சாலை தடுப்பில் அதிவேகத்தில் சுவரில் மோதியதில் தீப்பிடித்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திலும் காரை ஓட்டி வந்தவர் தப்பினார். இதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மூன்றாவது தெஸ்லா எஸ் கார் டென்னிஸியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த காரின் ஒயரிங்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பான காரா?

பாதுகாப்பான காரா?

உலகின் பாதுகாப்பான கார்களில் முதன்மையானது என்று சான்றளிக்கப்பட்ட தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார் அடுத்தடுத்து தீப்பிடித்து வருவதற்கான காரணங்களை அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

காரணங்கள்

காரணங்கள்

தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிவது தயாரிப்பு நிலை குறைபாடுகள் இல்லை என தெஸ்லா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் கார்கள் அதிவேகத்தில் மோதும்போது எரிபொருள் தொட்டி வெடித்து தீப்பிடித்துவிடும். இதேபோன்று, தெஸ்லா எஸ் கார் அதிவேகத்தில் மோதும்போது பேட்டரி அமைப்பில் தீப்பற்றுகிறது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

சக்திவாய்ந்த கார்

சக்திவாய்ந்த கார்

உலகின் மிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் காராக தெஸ்லா எஸ் மாடல் குறிப்பிடப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான பெர்ஃபார்மென்ஸ் கெண்ட இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tesla Model S, considered by many as the best electric passenger car ever, even surpassed the highest overall safety ratings awarded by the agency. Naturally, the public's confidence in the car was very high. Was. That's because that confidence has somewhat been shaken by recent developments which took place within the past six weeks. But it's not a deal that it's being made into. Here's why.
Story first published: Friday, November 8, 2013, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X