ஜூலையில் டாப் 20 இடங்களை பிடித்த கார் மாடல்கள்!!

கடந்த மாதமும் கார் விற்பனையில் ஆஹா, ஓஹோ என்று கூற முடியாத நிலைதான் நீடிக்கிறது. மாருதி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை ஏற்றம் பெற்றது. பல முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மிகவும் பரிதாபகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மூன்றாம் இடத்திலிருந்து வெகு சீக்கிரமாக தற்போது 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த மாதம் விற்பனையில் முதல் 20 இடங்களில் இருக்கும் கார் மாடல்கள் பற்றிய ஓர் தொகுப்பு.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

கடந்த இரு மாதங்களாக மீண்டும் ஆல்ட்டோ தனது நம்பர்- 1 இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 18,206 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

கடந்த மாதம் டிசையர் விற்பனை சரிவை கண்டிருந்த நிலையில், கொஞ்சம் சலுகைகளை கொடுத்து டிசையர் விற்பனையை மாருதி மீட்டெடுத்துள்ளது. காத்திருப்பு காலமும் குறைந்திருப்பதால், ரசிகர்களின் ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 15,249 டிசையர் கார்கள் விற்பனையானது.

வேகன் ஆர்

வேகன் ஆர்

முதல் மூன்று இடங்கள் ஆல்ட்டோ, டிசையர், ஸ்விப்ட் என தங்களின் பங்காளிகள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கார் மார்க்கெட்டில் ஸ்விப்ட்டை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது வேகன் ஆர். கடந்த மாதம் 13,409 வேகன் ஆர் கார்கள் விற்பனையானது.

ஸ்விப்ட்

ஸ்விப்ட்

விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை தக்க வைத்து ஸ்விப்ட்டுக்கு கடந்த மாதம் சோதனையாக அமைந்தது. கடந்த மாதம் 10,461 ஸ்விப்ட் கார்களை மாருதி விற்பனை செய்தது. சலுகைகளுக்கு போதிய புண்ணியமில்லை என்று கூறும் அளவுக்கு ஸ்விப்ட் காரின் விற்பனை சரிந்துள்ளது மாருதிக்கு கவலையை தந்துள்ளது.

பொலிரோ

பொலிரோ

கடந்த மாதம் மஹிந்திரா பொலிரோ மீண்டும் தனது ஆஸ்தான இடமான 5க்கு முன்னேறியது. இருப்பினும், ஜூனில் 7,983 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 6,955 பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனையானது.

இயான்

இயான்

ஹூண்டாய் இயான் விற்பனையும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த மாதம் 6,946 இயான் கார்கள் விற்பனையானது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

கடந்த ஜூனில் 5ம் இடத்தை பிடித்த ஹூண்டாய் ஐ10 கார் 2 இடங்கள் பின்தங்கி 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் 6,735 ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன.

அமேஸ்

அமேஸ்

அமேஸ் காருக்கான வரவேற்பு தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த மாதம் 6,515 அமேஸ் கார்கள் விற்பனையாகி ஹோண்டாவின் விற்பனை உயர்வுக்கு பெரும் வித்திட்டது.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

கடந்த மாதம் 5,366 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூனில் 8ம் இடத்தில் இருந்து தற்போது 9ம் இடத்துக்கு பின்தங்கியுள்ளது ஹூண்டாய் ஐ20.

ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட்

கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த ஈக்கோஸ்போர்ட்தான் இப்போது மார்க்கெட்டின் சூப்பர் ஸ்டார் மாடல். கடந்த ஜூனில் 4,002 ஈக்கோஸ்போர்ட் கார்களை விற்பனை செய்ததாக தெரிவித்த ஃபோர்டு, கடந்த மாதம் 4,715 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது. மேலும், 15ம் இடத்திலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே விற்பனை பட்டியலில் 10ம் இடத்தை பிடித்து டாப்-10 கார் மாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இன்னோவா

இன்னோவா

கடந்த மாதமும் தொடர்ந்து 11வது இடத்தில் இருக்கிறது டொயோட்டா இன்னோவா. கடந்த மாதம் 4,677 இன்னோவா கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களாக டொயோட்டாவுக்கு இன்னோவா விற்பனை கவலை தரும் விஷயமாகவே மாறியிருக்கிறது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

ஜூன் மாதம் போன்றே கடந்த மாதமும் மாருதி எர்டிகா 12வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 4,562 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

டாடா இன்டிகா

டாடா இன்டிகா

டாடா மாதத்துக்கு மாதம் பட்டியலில் பின்னோக்கி செல்வதற்கு இன்டிகா வரிசை கார்களின் விற்பனை படு மோசமாகியுள்ளதும் காரணம். டாப் 10 இடத்தில் இருந்து வந்த இன்டிகா வரிசை கார்களின் விற்பனை தொடர்+ந்து பின்னோக்கி செல்வதுடன், டாடாவையும் படு வேகத்தில் கடைசி இடத்தை நோக்கி இழுத்துச் சென்று வருகின்றன.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

ஸ்விப்ட் கைவிட்டாலும்,மாருதி விற்பனை சிறிதளவு உயர்ந்தில் ஓம்னி, ஈக்கோ மினி வேன்களும் பங்களிப்பை தந்துள்ளன. கடந்த மாதம் 4,276 ஓம்னி மினி வேன்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

மிட்சைஸ் செக்மென்ட்டில் ஹூண்டாய் வெர்னா நம்பர்- ஆக இருந்து வருகிறது. கடந்த மாதம் 3,479 வெர்னா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்தது.

ஈக்கோ

ஈக்கோ

ஓம்னி போன்றே ஈக்கோ காரின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. கடந்த மாதம் 3,329 ஈக்கோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 16வது இடத்தில் இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோ

பல மாத இடைவெளிக்கு பின்னர் டஸ்ட்டரைவிட சற்று கூடுதலான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 3,256 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

ஈக்கோஸ்போர்ட் சூறாவளியால் நேரடி பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது ரெனோ டஸ்ட்டர். சராசரியாக மாதத்திற்கு 4,500 கார்கள் என்ற அளவில் இருந்த ரெனோ டஸ்ட்டர் விற்பனை கடந்த மாதம் 3,089 ஆக குறைந்து போய்விட்டது. இது ரெனோவுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

எத்தனையோ கார் மாடல்கள் புதிது புதிதாக அறிமுகம் ஆனாலும் சான்ட்ரோவுக்கு மார்க்கெட்டில் ஓர் சிறிய இடம் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 2,961 சான்ட்ரோ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

கடந்த மாதம் 2,680 டொயோட்டா எட்டியோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த மாத டாப் 20 பட்டியலில் டொயோட்டா எட்டியோஸுக்கும் இடம் கிடைத்துள்ளது.

Most Read Articles
English summary
Here is the top 20 list of cars sold in India during the month of July 2013.
Story first published: Monday, August 5, 2013, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X