விற்பனையில் சிறந்த மற்றும் மோசமான செடான் கார்கள் - ஒரு பார்வை

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு அடுத்ததாக வாடிக்கையாளர்களின் கவனத்தை செடான் கார்களே அதிகம் ஈர்க்கின்றன. அதிலும், மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

பண்டிகை காலம் கடந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களில் விற்பனையில் மிக மோசமான எண்ணிக்கையை பதிவு செய்த செடான் கார்களையும், தொடர்ந்து அதிகம் விற்பனையான செடான் கார்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

 ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிக முக்கியமான இடத்தை ஃபோர்டு இழந்துள்ளதை இந்த புள்ளிவிபரம் காட்டுகிறது. கடந்த 3 மாதங்களில் வெறும் 583 குளோபல் ஃபியஸ்ட்டா கார்களை மட்டுமே ஃபோர்டு விற்பனை செய்துள்ளது. சிறப்பான மாடலாக இருந்தும் விலை உள்ளிட்ட ஓரிரு காரணங்களால் குளோபல் ஃபியஸ்ட்டா கார் படு மோசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. மொத்தம் 583 கார்களில் அக்டோபரில் மட்டும் 410 ஃபியஸ்ட்டா கார்கள் விற்பனையாகியுள்ளது. இல்லையெனில், இந்த எண்ணிக்கையை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

மாருதி எஸ்எக்ஸ்- 4

மாருதி எஸ்எக்ஸ்- 4

விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாருதியின் மிக மோசமான விற்பனை எண்ணிக்கை கொண்ட கார் என்ற அவப்பெயரை எஸ்எக்ஸ்4 சம்பாதித்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் வெறும் 984 எஸ்எக்ஸ்4 கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்துள்ளது. எஸ்எக்ஸ்4 வீழ்ச்சிக்கு டிசைன் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒய்எல்1 என்ற பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய காரை எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக மாருதி நிலைநிறுத்த உள்ளது. அதன்பின்னர், இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

 ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியாவின் விற்பனை மெல்ல மெல்ல ஏறுமுகத்தில் செல்கிறது. இது ஃபியட்டுக்கு கொஞ்சம் உற்சாகத்தை தந்துள்ளது. சிறந்த காராக இருந்தும் போட்டியாளர்களுக்கு இணையான விற்பனையை எண்ணிக்கையை இந்த கார் பதிவு செய்யாமல் தவிக்கிறது. விரைவில் இந்த காரின் புதிய மாடலும் வர இருப்பதால், விற்பனை எண்ணிக்கை கூடுதலாகும் என எதிர்பார்க்கலாம். கடந்த 3 மாதங்களில் 1,019 லீனியா கார்கள் விற்பனையாகியுள்ளன.

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

நிசான் சன்னியை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்காலா விற்பனையில் படு மந்தமாகவே இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 1,155 ஸ்காலா கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. அதிக இடவசதி, சிறந்த எஞ்சின் போன்ற அம்சங்களை கொண்டிருந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க காராக இல்லை என்று வாடிக்கையாளர்கள் நினைப்பது இதன் விற்பனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ

ஓரளவு சராசரியாக இருந்த வெரிட்டோ காரின் விற்பனை வெரிட்டோ வைப் வந்தவுடன் படுத்துக் கொண்டு விட்டது. அப்படியானால், வைப் காரின் விற்பனை ஓஹோவாக இருக்கும் என நினைத்தால் அதுவும் இல்லை. ஆம், கடந்த 3 மாத காலத்தில் வெறும் 1,283 வெரிட்டோ செடான் கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. சிறந்த இடவசதி, கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த காரின் டிசைனை வாடிக்கையாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் செடான் கார்களை காணலாம்.

 மாருதி டிசையர்

மாருதி டிசையர்

கண்ணை மூடிக்கொண்டே மாருதி டிசையர்தான் விற்பனையில் நம்பர் - 1 என்று கூறிவிடலாம். கடந்த 3 மாதங்களில் மட்டும் 47,642 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. அடக்கமான டிசைன், சிறந்த மைலேஜ், மாருதியின் நெட்வொர்க் என மார்க்கெட்டில் வலுவான இடத்தை பிடித்து வைத்திருப்பதோடு, யாரும் அருகில் நெருங்க முடியாத அளவு விற்பனையிலும் சாதித்து வருகிறது.

 ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டாவின் தலையெழுத்தை மாற்றிய பெருமையை அமேஸுக்கு உண்டு. விற்பனைக்கு வந்தது முதல் ஹோண்டாவின் மொத்த கார் விற்பனை பல புதிய உச்ச எண்ணிக்கைகளை தொட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 22,485 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. சிறந்த இடவசதி கொண்ட காம்பெக்ட் செடான் கார் என்பதோடு, ஹோண்டாவின் பிராண்டு முத்திரை மற்றும் அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் ஆகியவை ஹோண்டா அமேஸ் காருக்கு செடான் மார்க்கெட்டில் முக்கிய இடம் கிடைத்துள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

காம்பெக்ட் மார்க்கெட்டை விட்டு மிட்சைஸ் மார்க்கெட்டுக்கு வந்தால், ஹூண்டாய் வெர்னா விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. சிறந்த டிசைன், வசதிகள், இரண்டு எஞ்சின் ஆப்ஷன்கள், டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் என பலவகை சிறப்புகளோடு ஹூண்டாய் வெர்னா தனது இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த 3 மாத காலத்தில் மொத்தம் 12,590 ஹூண்டாய் வெர்னா கார்கள் விற்பனையாகியுள்ளன.

 டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

மார்க்கெட்டில் இருக்கும் செடான் கார்களில் அதிக கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொண்ட கார் டொயோட்டா எட்டியோஸ். 595 லிட்டர் கொள்ளழு கொண்டிருப்பதுடன், சிறந்த இடவசதியையும் அளிக்கிறது. இதன் காரணமாக, தனி நபர் மார்க்கெட் மற்றும் டாக்சி மார்க்கெட் என இரண்டிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் கிடைக்கும் இந்த கார் டொயோட்டா விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் மொத்தம் 8,665 டொயோட்டா எட்டியோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X