ஜூன் மாத விற்பனையில் டாப்- 20 கார்களின் லிஸ்ட்

கடந்த மாத விற்பனை நிலவரப்படி, ஆல்ட்டோ மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. டாப்-4 இடங்களில் வழக்கம்போல் மாருதி கார்களே இடம் பிடித்தன. எர்டிகா, இன்னோவா, எக்ஸ்யூவி 500 ஆகிய யுட்டிலிட்டி ரக கார்களின் விற்பனையும் இறங்கு முகமாகவே இருந்தன.

கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த அமேஸ் தொடர்ந்து டாப்-10 லிஸ்ட்டுக்கு இடம் பிடித்துள்ளது. இதுதவிர, கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மிி எஸ்யூவி மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதல் மாதத்திலேயே டாப்-20 கால் லிஸ்ட்டுக்குள் நுழைந்துள்ளது. கடந்த மாதம் விற்பனையில் டாப்-20 இடங்களை பிடித்த கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் 20,077 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி டாப்-20 லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது ஆல்ட்டோவின் விற்பனை 7 சதவீதம் வரை சரிந்துள்ளது.

மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட்

விற்பனையில் சரிவை கண்டு வரும் ஸ்விப்ட் கடந்த மாத லிஸ்ட்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தமாக 17,326 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது விற்பனை 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

கடந்த மே மாதம் முதலிடத்தில் இருந்த டிசையர் விற்பனை அமேஸ் வருகையின் எதிரொலியால் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 12,548 டிசையர் கார்கள் விற்பனையாகியது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9 சதவீதம் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

டாப் 20 லிஸ்ட்டில் வேகன் ஆர் காருக்கு 4ம் இடம் என்பது எழுதி வைக்கப்படதா விதியாகவிட்டது. கடந்த மாதம் 9,395 வேகன் ஆர் கார்கள் விற்பனையானது. 4ம் இடத்தில் நீடித்தாலும், விற்பனை 10,000க்குள் சுருங்கிவிட்டது மாருதியை கவலை அடையச் செய்துள்ளது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10 கார் விற்பனை கடந்த மாதம் படுஜோராக முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த மாதம் 8,174 ஐ10 கார்கள் விற்பனையானது. மேலும், பட்டியலில் 5ம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையை ஒப்பிடுகையில், கடந்த மாதம் விற்பனை 32.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

டாப்10 லிஸ்ட்டில் தொடர்ந்து நிலைத்திருக்கும் மஹிந்திரா பொலிரோ 5ம் இடத்திலிருந்து கடந்த மாதம் ஒருபடி இறங்கி 6ம் இடத்துக்கு இறங்கியது. கடந்த மாதம் 7,983 பொலிரோ கார்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட விற்பனை 16 சதவீதம் குறைந்துவிட்டது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஆல்ட்டோவுக்கு போட்டியாளராக இறக்கிவிடப்பட்ட ஹூண்டாய் இயான் கடந்த மாதம் தனது சக பங்காளியான ஐ10 விற்பனையை விட மிகவும் குறைந்து போனது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் இயான் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 7,770 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

ஜூன் மாதம் 5,628 ஹூண்டாய் ஐ20 கார்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த மாத விற்பனை 27 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

டாடா இண்டிகா மற்றும் விஸ்டா

டாடா இண்டிகா மற்றும் விஸ்டா

கடந்த மாதம் இண்டிகா மற்றும் விஸ்டாவின் ஒட்டுமொத்த விற்பனை 5,157 என்ற எண்ணிக்கையில் பதிவானது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

கடந்த மாதம் 4,965 அமேஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மேமாதம் 8ம் இடத்தில் இருந்த அமேஸ் கடந்த மாதம் 10 இடத்துக்கு இறங்கியுள்ளது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

இன்னோவா காரின் விற்பனை மே மாதத்தை விட சற்று அதிகரித்திருப்பதுடன், டாப் 20 லிஸ்ட்டில் 17வது இடத்திலிருந்து தற்போது 11வது இடத்துக்கு முன்னேறியிருப்பது டொயோட்டாவுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட விற்பனை 28 சதவீதம் குறைந்துவிட்டது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகாவின் விற்பனையுமம் 8 சதவீதம் குறைந்துபோயுள்ளது. கடந்த மாதம் 4,950 எர்டிகா கார்கள் விற்பனையானது.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

ஐ10 கார் போன்றே சான்ட்ரோ காரின் விற்பனை திடீரென அதிகரித்திருப்பது ஹூண்டாய் நிறுவனத்துக்கு புதுத்தெம்பை வழங்கியுள்ளது. கடந்த மாதம் 4,721 ஹூண்டாய் சான்ட்ரோ கார்கள் விற்பனையானது. பட்டியலில் 13ம் இடத்தை பிடித்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

கடந்த மாதம் 4,523 டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையானது. அதேவேளை, 12ம் இடத்திலிருந்து தற்போது 14வது இடத்துக்கு இறங்கியுள்ளது டஸ்ட்டர்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே டாப்-20 விற்பனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். கடந்த மாதம் 4,002 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்களை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 15ம் இடத்தில் ஈக்கோஸ்போர்ட்.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

கடந்த மாதம் 3,930 மாருதி ஓம்னி கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் இதனை ஒப்பிடுகையில் விற்பனை 37 சதவீதம் குறைந்துவிட்டது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

விற்பனை பட்டியலில் சி+ செக்மென்ட்டில் இருந்து இடம் பிடித்திருக்கும் ஒரே மாடல் ஹூண்டாய் வெர்னாதான். மொத்தம் 3,876 வெர்னா கார்கள் விற்பனையாகியது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் விற்பனை 35 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

கடந்த மாதம் 3,628 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், விற்பனை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

சிறந்த பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக்காக புகழப்பெறும் மாருதி ரிட்ஸ் கடந்த மாத நிலவரப்படி பட்டியலில் 19வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 3,257 மாருதி ரிட்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடும்போது விற்பனை கிட்டத்தட்ட பாதியளவு குறைந்துபோயுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

கடந்த மாதம் 3,200 ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த மாத விற்பனை 32 சதவீதம் குறைந்துள்ளது.

Most Read Articles
English summary
Here is the top 20 list of cars sold in India during the month of June 2013.
Story first published: Wednesday, July 10, 2013, 9:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X