டொயோட்டாவின் 'ஸ்மார்ட்போன்' கான்செப்ட் கார் - சுவாரஸ்ய தகவல்கள்!

உலகம் முழுவதும் உள்ள கார் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பரைசாற்றவும், கவனத்தை ஈர்க்கவும் விந்தையான சில கான்செப்ட் கார்களை உருவாக்குவது வழக்கம். இப்படிப்பட்ட கார்கள் உற்பத்தி நிலைக்கு செல்வது அரிது என்றாலும், எதிர்கால டிசைன் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருக்கும்.

இதுபோன்ற தாத்பரியத்துடன் கடந்த ஆண்டு டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் டொயோட்டா வைத்திருந்த கான்செப்ட் கார் மாடல்தான் ஃபன் விஐஐ. பார்வையாளர்களின் பெரிதும் கவர்ந்த இந்த கார் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன. இதன் பாடி பேனல்களே ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்மார்ட்போன் கார்

ஸ்மார்ட்போன் கார்

இந்த கார் முழுக்க ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபன் விஐஐ(வெகிக்கிள் இன்டராக்டிவ், இன்டர்நெட்) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

டச் ஸ்கிரீன் பாடி

டச் ஸ்கிரீன் பாடி

இதன் பாடி பேனல்கள் ஸ்மார்ட்போன் டச் ஸ்கிரீன் போன்று செயல்படும்

கண்ணை கவரும் கார்

கண்ணை கவரும் கார்

இதுபோன்று படங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப செட்டிங் செய்து கொள்ள முடியும்.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

இது ஓர் எலக்ட்ரிக் கார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?. இந்த காரை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இடவசதி

இடவசதி

3 பேர் அமர்ந்து செல்லும் இடவசதி கொண்டது.

பூராவும் டச் ஸ்கிரீன்தான்

பூராவும் டச் ஸ்கிரீன்தான்

இதன் முன்புற வைன்ட்ஷீல்டின் உட்புறம் பெரிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் போன்று இருக்கிறது. இதில், ஏராளமான தகவல்களை பெற முடியும். மேலும், மூடுக்கு தகுந்தாற்போல் காரின் இன்டிரியர் கலரை மாற்ற முடியும்.

உற்பத்தி நிலைக்கு செல்லுமா?

உற்பத்தி நிலைக்கு செல்லுமா?

இந்த காரை உற்பத்தி செய்வது குறித்து டொயோட்டா தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவலும் இல்லை.

டொயோட்டா பூடகம்

டொயோட்டா பூடகம்

இந்த நூற்றாண்டில் இதுபோன்ற கார்கள் எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பு துவங்கப்படலாம் என டொயோட்டா பூடகம் போட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் இணைப்பு

ஸ்மார்ட்போன் இணைப்பு

இந்த காரின் வெளிப்புற கலரை ஸ்மார்ட்போனிலிருந்தே மாற்ற முடியும். இதுபோன்ற எண்ணற்ற வசதிகளை ஸ்மார்ட்போன் மூலம் இந்த காரில் செய்ய முடியும்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

கரிப் புகையால் காற்றில் விஷம் பரப்பி வரும் வாகனங்களுக்கு மத்தியில் இந்த புதிய கான்செப்ட் கார் பேட்டரியில் இயங்குவதால் புகை வெளியேற்றாது.

முன்னோடி தொழில்நுட்பம்

முன்னோடி தொழில்நுட்பம்

தற்போது டேஷ்போர்டு வரை ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் கார்களில் வந்துவிட்டது. ஆனால், இந்த கார் முழுவதும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் நிறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் காரும் உற்பத்தி நிலையை எட்டினால் ஆட்டோமொபைல் தொழில்நுட்ப உலகில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
Toyota Fun Vii was unveiled during the 2012 Tokyo motor show and it grabbed eyeballs immediately. The Fun Vii is Toyota's attempt to merge features of a smart phone with a car. Here are some interesting images of the Toyota Fun Vii
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X