விற்பனையில் உலகின் நம்பர்-1 இடத்தில் டொயோட்டா

By Saravana
Toyota Landcruieser
2012ல் கார் விற்பனையில் மீண்டும் உலகின் நம்பர்-1 நிறுவனமாக வாகை சூடியிருக்கிறது ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா.

70 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர்-1 கார் உற்பத்தியாளராக அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் இருந்து வந்தது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார சரிவு காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை சரிந்ததால் முதலிடத்தை டொயோட்டா பிடித்தது.

இந்த நிலையில், உலகின் நம்பர்-1 கார் நிறுவனமாக இருந்த டொயோட்டா 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு முதலிடத்தை இழந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் டொயோட்டா விற்பனையில் மீண்டும் உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 9.75 மில்லியன் வாகனங்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. தரம் அது நிரந்தரம் என்ற தாரக மந்திரமே டொயோட்டாவை இந்த இடத்துக்கு முன்னேற்றியுள்ளது.

இதற்கடுத்ததாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 9.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 9.1 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த ஃபோக்ஸ்வேகன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இதனிடையே, 2018ல் உலகின் நம்பர்-1 கார் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பெரும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

ஆனால், டொயோட்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களை அந்த நிறுவனம் விற்பனையில் விஞ்சினால் மட்டுமே தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Toyota, the Japanese carmaker has again become the world's best selling car brand. Toyota had lost its top position to General Motors in 2011 when the tsunami in Japan devastated its production facilities. To add to this sales in its largest market, the United states had also dropped significantly. Toyota has once again become the best selling car brand after it sold 9.75 million vehicles in2012.
Story first published: Tuesday, January 29, 2013, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X