மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா கார் - விபரம்

By Saravana
Toyota Innova
வரும் 19ந் தேதி இந்தோனேஷியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய டொயோட்டா இன்னோவா விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதற்கு முன்னதாகவே, மேம்படுத்தப்பட்ட இன்னோவாவின் படங்கள், தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பக்க கிரில், பம்பர் டிசைன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பின்புற வைன்ட்ஷீல்டுக்கு கீழே பூட்லிட் குரோம் பட்டை பொருத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளை, அனைத்து வேரியண்ட்களிலும் இந்த மாற்றங்கள் இருக்காதாம். டாப் வேரியண்ட்களில் மட்டுமே கூடுதல் மாற்றங்கள் இருக்கும்.

ஜே என்ற பேஸ் வேரியண்ட்டில் தற்போது வீல் கேப்புகள் மற்றும் டூயல் ஏர்பேக்குகள் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கின்றன.

இதனையடுத்து, அனைத்து வேரியண்ட்டுகளிலும் தற்போது முன்பக்க டூயல் ஏர்பேக்குகள் நிரந்தர அம்சமாக இருக்கும்.

டாப் வேரியண்ட்டுகளில் புதிய மியூசிக் சிஸ்டமும் இடம் பிடித்துள்ளதால், விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் அறிமுகமாக இருக்கும் ஜே, இ, ஜி ஆகிய வேரியண்ட்கள் இந்திய மதிப்பில் ரூ.28,000 வரை விலை அதிகரிக்கப்படுகிறது.

வி டாப் வேரியண்ட்டின் விலை ரூ.10,500 அதிகரிக்கப்படுகிறது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்பட்டிருக்காது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட இன்னோவா விற்பனைக்கு வருகிறது.

முதலில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய இன்னோவா அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Japanese car maker Toyota is all set to launch Innova facelift in Indonesia soon. The new Innova will be launched in Indian maket by early next year.
Story first published: Saturday, August 17, 2013, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X