இந்தியர்களுக்கு ஹைபிரிட் சுவையை ஊட்டுவதற்கு டொயோட்டா ஆயத்தம்!

இந்தியாவில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கேம்ரி காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. நம் நாட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட ஹைபிரிட் கார்களான ஹோண்டா சிவிக் மற்றும் டொயோட்டாவின் பிரையஸ் ஆகியவை பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை குறைக்கும் அம்சங்கள் கொண்ட கேம்ரியை இந்திய மண்ணில் களமிறக்கவும், ஹைபிரிட் கார்களில் இருக்கும் பயன்கள் மற்றும் சுவையை வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்ளவும் புதிய முயற்சியை டொயோட்டா செய்ய உள்ளது.

தாய்லாந்து மாடல்

தாய்லாந்து மாடல்

தாய்லாந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் அதே ஹைபிரிட் கேம்ரி மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

இந்த காரில் 160பிஎஸ் பவரையும், 213 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 45 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மின் மோட்டாருடன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இ- சிவிடி டிரான்ஸ்மிஷன் மூலம் முன்பக்க சக்கரங்களுக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது. ஹைபிரிட் கேம்ரியின் முகப்பு கிரில் டிசைன் வித்தியாசம் இருக்கும்.

மாறுதல்கள்

மாறுதல்கள்

17 இஞ்ச் அலாய் வீல்கள், ஹைபிரிட் பேட்ஜ், வேறு விதமான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இன்டிரியரில் மாற்றங்கள் ஆகியவை சாதாரண மாடலிலிருந்து ஹைபிரிட் கேம்ரியை வித்தியாசப்படுத்தும்.

விலை

விலை

சாதாரண மாடலைவிட ஹைபிரிட் மாடல் ரூ.5 லட்சம் கூடுதல் விலையில் விற்பனைக்கு வரலாம். இந்த மாத இறுதியில் புதிய ஹைபிரிட் கேம்ரி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்திற்கு 20 ஹைபிரிட் கேம்ரி கார்களை விற்பனை செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Toyota is planning to launch Hybrid camry car in Indian market soon.
Story first published: Monday, August 12, 2013, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X