புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் லிவா

Liva
புதிய பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் லிவா ஹேட்ச்பேக் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டொயோட்டா.

ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுவதையடுத்து லிவா காரை மேம்படுத்தி வருகிறது டொயோட்டா. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து வருகிறது டொயோட்டா. இன்டிரியர் மற்றும் டேஷ்போர்டில் தரமான பிளாஸ்டிக்குகள் பொருத்தப்படுகிறது.

மேலும், புதிய லிவா காரின் பவர்ஃபுல் பெட்ரோல் வெர்ஷனையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் லிவா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய பவர்ஃபுல் லிவா காரை அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனுடன் வரும் இந்த மாடலின் பிரேக், சஸ்பென்ஷன் ஆகியவையும் மேம்படுத்தப்படுகிறது. இந்த புதிய பவர்ஃபுல் வெர்ஷன் லிவா டிரைவிங்கில் வாடிக்கையாளர்களுக்கு பரவச அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20, ஃபியட் புன்ட்டோ மற்றும் டாடா விஸ்டா ஆகிய கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் டீசலில் விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல் மாடலை கண்டால் தூர ஓடும் மனநிலையுடன் இருக்கும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் லிவா வெற்றி பெறுமா? சற்று காத்திருப்போம்.

Most Read Articles
English summary
Japanese car maker Toyota is working to launch a refreshed version of its Liva hatchback in Indai soon. As per reports, a more powerful Liva with some major makeovers will soon make its debut to enhance its premium appeal and sales counts as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X