ஜூன் 6ந் தேதி புதிய கரொல்லா காரை அறிமுகப்படுத்தும் டொயோட்டா

அடுத்த மாதம் 6 ந்தேதி புதிய கரொல்லா காரை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா. இந்தியாவில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இ160 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் கார் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஃப்யூரியா கான்செப்ட் உற்பத்தி நிலை மாடலாக இருக்கும்.

இளைய சமுதாய வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில், கவர்ச்சிக்கு அதிக முக்கியம் தரும் அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இடவசதி, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது புதிய கரொல்லா. எல்இடி பனி விளக்குகள், புதிய முகப்பு கிரில், மனதை மயக்கும் ஹெட்லைட் டிசைனை கொண்டிருக்கும். டியூவல் புகை போக்கி குழாயும் கரொல்லாவுக்கு அழகையும், கம்பீரத்தையும் சேர்க்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய கரொல்லாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றை மேம்படுத்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

தற்போதைய மாடலில் இருக்கும் அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் அதிக மாற்றங்களுடன் கண்டிருக்கும். டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

எப்போது இந்தியாவுக்கு...?

எப்போது இந்தியாவுக்கு...?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் புதிய கரொல்லா செடான் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட் படங்கள்.

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட் படங்கள்.

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட் படங்கள்.

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட் படங்கள்.

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட்

டொயோட்டா ஃப்யூரியா கான்செப்ட் படங்கள்.

Most Read Articles
English summary
An all new Toyota Corolla, sold as Corolla Altis in India, will be revealed on June 6. The new Corolla sedan, codenamed E160 will be based on the Corolla Furia concept car that the Japanese automaker showcased at the Detroit Motor Show early this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X