உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டு அந்தஸ்தை மீண்டும் பெற்ற டொயோட்டா

உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டு என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளது டொயோட்டா. உலகின் மதிப்புமிக்க பிராண்டுகளை தேர்வு செய்வதற்காக மில்வார்டு பிரவுன் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், கார் பிராண்டுகளின் வர்த்தக மதிப்பு அடிப்படையில் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி டொயோட்டா முதலிடம் பெற்றுள்ளது. டாப்-100 மொத்த பட்டியலில் டொயோட்டா 23வது இடத்திலும், பிஎம்டபிள்யூ 24வது இடத்தையும் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தை மெர்சிடிஸ் பென்ஸ் பெற்றுள்ளது. ஆனால், மொத்த பட்டியலில் 43வது இடத்தை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனத்துக்கு டாப்-100 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஆப்பிள் நிறுவனம் வர்த்தக மதிப்பு அடிப்படையில் டாப்-100 பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் டாப்-10 கார் நிறுவனங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டாவின் வர்த்தக மதிப்பு 12 சதவீதம் அதிகரித்து 24,497 மில்லியன் டாலராக இருக்கிறது. ஹைபிரிட் கார் மார்க்கெட் டொயோட்டாவின் பிராண்டு மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூவின் பிராண்டு மதிப்பு வளர்ச்சி 2 சதவீதம் குறைந்து 24,015 மில்லியன் டாலராக இருக்கிறது.

 மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸின் வர்த்தக மதிப்பு 11 சதவீதம் அதிகரித்து 17,952 மில்லியன் டாலராக இருக்கிறது.

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டாவின் மதிப்பு 2 சதவீதம் குறைந்து 12,401 மில்லியன் டாலராக இருக்கிறது. பட்டியலில் 4ம் இடம் வகிக்கிறது.

 நிசான்

நிசான்

நிசானின் வர்த்தக மதிப்பு 3சதவீதம் அதிகரித்து 10,186 மில்லியன் டாலராக இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகனின் வர்த்தக மதிப்பு 3 சதவீதம் அதிகரித்து 8,790 மில்லியன் டாலராக இருக்கிறது.

ஃபோர்டு

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 8 சதவீதம் அதிகரித்து 7,556 டாலராக உயர்ந்துள்ளது.

 ஆடி

ஆடி

ஆடியின் வர்த்தக மதிப்பு 18 சதவீதம் அதிகரித்து 5,545 மில்லியன் டாலராக உள்ளது. டாப்-10 பட்டியலில் இடம்பிடித்தாலும், மில்வார்ட் பிரவுன் டாப்-100 பட்டியலில் ஆடிக்கு இடம் கிடைக்கவில்லை.

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாயின் வர்த்தக மதிப்பு 11 சதவீதம் அதிகரித்து 4,000 டாலராக உள்ளது.

 லெக்சஸ்

லெக்சஸ்

டொயோட்டாவின் சொகுசு கார் தயாரிப்பு பிராண்டான லெக்சஸ் பிராண்டின் வர்த்தக மதிப்பு 2 சதவீதம் அதிகரித்து 3,472 மில்லியன் டாலராக இருக்கிறது.

Most Read Articles
English summary
Toyota is once again the most valuable carmaker in the BrandZ Top 100 Most Valuable Global Brands list, replacing last year's topper BMW. The annual study is conducted by market research firm Millward Brown, that lists the world's 100 most valuable brands from all sectors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X