2040ல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை: இங்கிலாந்து அரசியல் கட்சி கோரிக்கை!

2040ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சுதந்திர ஜனநாயக கட்சிதான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் இந்த இலக்கை அடைவது கடினம் என்று அந்நாட்டை சேர்ந்த பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Hybrid Car

ஆனால், ஒருபுறம் சுற்றச்சூழல் ஆர்வலர்கள் இந்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் அதிக எரிபொருள் சிக்கனமும், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, மற்றொரு கோரிக்கையையும் அந்த கட்சி முன் வைத்துள்ளது. சுங்கச் சாலைகளில் கட்டணம் வசூலிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வர அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. எவ்வளவு கிலோமீட்டர் பயணம் செய்கின்றனரோ அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

போக்குவரத்து மிகுந்த நேரத்தில் ஒரு கட்டணமும், போக்குவரத்து குறைவான நேரத்தில் ஒரு கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும், தவிரவும் காரின் கார்பன் புகை வெளியிடும் தன்மைக்கு ஏற்றவாறு இந்த கட்டணத்தில் வித்தியாசப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Liberal Democrats, a UK political party which is a part of the ruling coalition government, has come out with a controversial proposal which will certainly not sit well with hardcore automobile enthusiasts. The proposal is to completely ban petrol and diesel passenger vehicles from UK roads by 2040.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X