ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு ரகசிய புக்கிங் துவங்கியது!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு டீலர்களில் ரகசிய புக்கிங் நடந்து வருகிறது. ரூ.50,000 முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஈக்கோஸ்போர்ட் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஈக்கோஸ்போர்ட் கும்பல் ஒன்று சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவிக்கு தற்போது டீலர்களில் ரூ.50,000 முன்பணம் பெற்றுக் கொண்டு ரகசிய புக்கிங் செய்யப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஈக்கோஸ்போர்ட் டெலிவிரி துவங்க இருப்பதாகவும் டீலர்களின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்தால் முன்பணத்தை திரும்ப தரப்படும் என்ற உறுதிமொழியோடு முன்பதிவு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் சாதகமாகவே இருப்பதை ஸ்லைடரில் உள்ள படங்கள் மற்றும் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால் நிச்சயம் பெரிய வெற்றியை பெறும்.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

உலக அளவில் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு ஃபோர்டு உருவாக்கிய புதிய குளோபல் பிளாட்பார்மில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வரிச்சலுகை கிடைக்கும்

வரிச்சலுகை கிடைக்கும்

இந்திய மாடலின் சிறப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஈக்கோஸ்போர்ட் வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 டஸ்ட்டருக்கு நெருக்கடி

டஸ்ட்டருக்கு நெருக்கடி

பிரேசில் மார்க்கெட்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட ஈக்கோஸ்போர்ட் அங்கு ரெனோ டஸ்ட்டருக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது. இந்தியாவிலும் ரெனோ டஸ்ட்டருக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

எஞ்சின் புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதோடு அதிக மைலேஜையும் தரும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்பட உள்ளது.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலும், பின்னர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இரண்டாம் தலைமுறை மாடல்

இரண்டாம் தலைமுறை மாடல்

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாக இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இரண்டாம் தலைமுறை கார். மேலும், சிறந்த இன்டிரியரை கொண்டிருக்கும்.

ஈக்கோஸ்போர்ட்டுக்கு பல்க் முதலீடு

ஈக்கோஸ்போர்ட்டுக்கு பல்க் முதலீடு

சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலையில்தான் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக, ரூ.750 கோடி முதலீட்டில் உற்பத்தி பிரிவுகளை அமைத்துள்ளது ஃபோர்டு. புதிய உற்பத்தி பிரிவில் பணிபுரிவதற்காக 400 புதிய தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இடவசதி

இடவசதி

5 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும். மேலும், பின்புறத்தில் இரண்டு சிறிய இருக்கைகளை பொருத்தவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் புதிய ஈக்கோஸ்போர்ட் அறிமுகமாகும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
The most anticipated model of Ford – The Ecosport will soon be launched in India but the dealers have already started accepting the bookings for the new Suv.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X