ரூ.8 லட்சத்தில் கிடைக்கும் யூஸ்டு சொகுசு கார்களின் பட்டியல்

கையில் ரூ.8 லட்சம் பணம் இருக்கிறது. ஸ்விப்ட் டீசல் வாங்கலாமா அல்லது மிட்சைஸ் செடான் கார் வாங்கலாமா? என்ற பலமான யோசனையில் இருக்கும் சிலருக்கு சொகுசு கார்கள் மீதும் ஆசை இருக்கும். ஆனால், நம் பட்ஜெட் தாங்காதே என்ற ஆதங்கத்தில் அந்த திட்டத்தை மனதின் ஒரு மூலையில் போட்டு பூட்டி வைத்திருப்பர். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் ஆதங்கத்தை போக்குவதற்கு அதே பட்ஜெட்டில் சிறந்த யூஸ்டு சொகுசு கார்கள் மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன.

இதில், 7 ஆண்டுகளுக்கு உட்பட்ட முன்னணி மாடல்களை இந்த தொகுப்பில் காணலாம். மேலும், இந்த கார்கள் 15 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டவை என்பதால் இந்த டீல் சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில், மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் சில முக்கிய சொகுசு கார் மாடல்களின் லிஸ்ட்டை ஸ்லைடரில் காணலாம். இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கும் மாடல்களின் அப்டேட் வெர்ஷன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஸ்பேர் பார்ட்ஸ் பிரச்னையும் இருக்காது.

பென்ஸ் சி கிளாஸ்

பென்ஸ் சி கிளாஸ்

ரூ.7 லட்சம் இருந்தால் யூஸ்டு பென்ஸ் சி கிளாஸ் கார் பக்கம் கண்டிப்பாக போகலாம். 2002ம் ஆண்டு இந்தியாவில் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், 2006ம் ஆண்டு சி கிளாஸ் கே200 பெட்ரோல் மாடல்தான் இந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இவை ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களும் கிடைக்கிறது. 50,000 கிமீ.,க்கும் குறைவான தூரம் ஓடிய கார்களாக இருக்கும் என்பதால் அதிக பிரச்னைகள் இருக்காது. ஆனால், இந்த காரை வாங்க கிளம்பும் வாடிக்கையாளர்கள் மற்றொரு முக்கிய விஷயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த காருக்கான சர்வீஸ் செலவுகள் மிக அதிகம். ஒரு முறை சாதாரண சர்வீஸ் செயவதற்கு சராசரியாக ரூ.24,000 ஆகும்.

ஹோண்டா அக்கார்டு

ஹோண்டா அக்கார்டு

ரூ.20.3 லட்சம் முதல் ரூ.27.3 லட்சம் விலையில் ஹோண்டா அக்கார்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், எரிபொருள் சிக்கனம் இல்லாததால் யூஸ்டு மார்க்கெட்டில் கைக்கு எட்டும் விலையிலேயே கிடைக்கிறது. 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2007ம் ஆண்டு மாடல் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் கிடைக்கிறது. பெர்ஃபார்மென்சில் சிறப்பாக இருக்கும். ஆனால், எரிபொருள் சிக்கனம் தராது. சிஎன்ஜியில் மாற்றிக் கொண்டால் அக்கார்டை கட்டித் தீணி போடலாம்.

டொயோட்டா கேம்ரி

டொயோட்டா கேம்ரி

டொயோட்டாவின் பிரிமியம் ரக செடான் கார். ஆனால், ரீசேல் வேல்யூ மிக குறைவு. இதன் ரீசேல் வேல்யூ ஆண்டுக்கு 30 சதவீதம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. 50,000கிமீ.,க்கும் குறைவாக ஓடிய 2007ம் ஆண்டு மாடல் ரூ.6 லட்சம் முதல் ரூ.7.75 லட்சம் விலையில் கிடைக்கிறது. அதிக இடவசதியை விரும்புபவர்களுக்கு இந்த யூஸ்டு கார் டீல் சிறப்பாக இருக்கும்.

ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

ரூ.8 லட்சத்தில் பிரிமியம் எஸ்யூவி கிடைத்தால் யோசிக்காமல் விட முடியுமா? இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பிரிமியம் எஸ்யூவி ஃபோர்டு எண்டெவர். தாராள இடவசதி கொண்ட இந்த கார் எந்த சாலைநிலைக்கும் ஏற்றது. 45,000 கிமீ முதல் 55,000 கிமீ வரை ஓடிய 2006-07 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்கள் ரூ.6.75 லட்சம் முதல் ரூ.7.75 லட்சம் விலையில் கிடைக்கிறது. மேலும், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களும் இதில் அடக்கம்.

ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி

புதிய கார் மார்க்கெட் மட்டுமின்றி ஹோண்டா பிராண்டு கார்களுக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் நன்மதிப்பு இருக்கிறது. ரூ.22 லட்சம் முதல் ரூ.24 லட்சம் விலையில் விற்பனை செய்யபப்படும் ஹோண்டாவின் சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி யூஸ்டு கார் மார்க்கெட்டில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. 60,000 கிமீ முதல் 70,000 கிமீ வரை ஓடிய 2006-2007ம் ஆண்டு சிஆர்வி மாடல்களை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் வாங்கலாம். பெட்ரோல் மாடல் என்பதால் எரிபொருளுக்கான செலவீனம் நிச்சயம் அதிகமாக இருக்கும். சில வாடிக்கையாளர்கள் சிஆர்வியை வாங்கி எரிவாயுவில் ஓடும் வகையில் மாற்றிக் கொள்கின்றனர்.

Most Read Articles
English summary
As a buyer,you have Rs. 8 lakhs in your hand, there are a number of luxury cars in the market, not more than seven years old (given that a car’s life is 15 years), which will still command a whole lot of respect. Here are five used luxury car models that would have normally cost you over Rs. 18 lakh that you can now find in the used car market for between Rs. 5 lakh and Rs. 8 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X