விற்பனையில் பின்தங்கிய பஸாத் காருக்கு குட்பை சொன்ன ஃபோக்ஸ்வேகன்

By Saravana

அக்கார்டு காரின் விற்பனையை நிறுத்துவதாக ஹோண்டா அறிவித்த அதே நாளில் பஸாத் காரின் விற்பனையை இந்திய மார்க்கெட்டில் நிறுத்துவதாக ஃபோக்ஸ்வேகனும் அறிவித்துள்ளது.

சொல்லப்போனால் இரண்டு கார்களுமே ஒரே செக்மென்ட்டில் விற்பனை செய்யப்பட்டவைதான். இரு கார்களுமே விற்பனையில் படுமோசமான எண்ணிக்கையை பதிவு செய்து வந்தன.

Volkswagen Passat

இந்த நிலையில், அக்கார்டு விற்பனையை நிறுத்துவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரத்த்தில் பஸாத் காரின் விற்பனையை நிறுத்துவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 235 பஸாத் கார்களை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது. கிட்டத்தட்ட அக்கார்டு நிலைதான். ரூ.26 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரையிலான விலையில் பஸாத் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் தற்போது ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் ஆரம்ப நிலை கார்களும் இந்த விலையில் விற்பனைக்கு கிடைப்பதால் பஸாத் விற்பனை படுமோசமாக இருந்து வந்தது.

எனவே, ஃபோக்ஸ்வேகன் இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய பஸாத் காரை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் ஃபோக்ஸ்வேகனிடம் தற்போது இல்லை. 2015ம் ஆண்டில் புதிய பஸாத் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Volkswagen has decided to pull out the Passat luxury sedan from its inventory in India. The announcement follows a similar decision by Honda to stop sales of the Accord in India, earlier today.
Story first published: Tuesday, December 24, 2013, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X