பழைய ஆட்டோமேட்டிக் வென்ட்டோ உற்பத்தி நிறுத்தம்!

By Saravana

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த பழைய ஆட்டோமேட்டிக் மாடல் வென்ட்டோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வென்ட்டோ டிஎஸ்ஐ மாடலுக்கு வழிவிடும் வகையில் இந்த நடவடிக்கையை போக்ஸ்வேகன் எடுத்துள்ளது.

இதுவரை 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Volkswagen Vento

இந்த நிலையில், டர்போசார்ஜர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலை ஃபோக்ஸ்வேகன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்கள், இரண்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்கள் விற்பனை செய்வதிலும், உற்பத்தியிலும் இருக்கும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு தற்போது 1.6 லிட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வென்ட்டோ டிஎஸ்ஐ மாடல் 105 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். செயல்திறன் மிக்க ஆட்டோமேட்டிக் மாடலாக புதிய வென்ட்டோ டிஎஸ்ஐ இருக்கிறது. எனவே, பழைய ஆட்டோமேட்டிக் மாடல் உற்பத்தி நிறுத்தம் தவிர்க்க முடியாததாகிவிட்டதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் தற்போது 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களிலும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen has stopped production of Vento petrol automatic for the Indian market. This logical step was taken by the German automaker in the light of the recently launched Vento TSI, which makes the prior former irrelevant.
Story first published: Saturday, November 9, 2013, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X