அனைத்து கார்களுக்கும் புத்தம் புதிய எஞ்சின்களை பூட்டும் வால்வோ!

அனைத்து கார் மாடல்களிலும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவைக்கப்பட்ட புத்தம் புதிய எஞ்சின்களை பொருத்த உள்ளது வால்வோ.

டிரைவ் இ என்ற பெயரில் புதிய டீசல் எஞ்சின் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சின்கள் விரைவில் வருகின்றன. தற்போது இருக்கும் 6 சிலிண்டர், 8 சிலிண்டர் எஞ்சின்களுக்கு குட்பை சொல்வதுடன் இனி வரும் புதிய எஞ்சின்கள் அனைத்தும் 4 சிலிண்டர் கொண்டதாக இருக்கும்.

Volvo New Engines

டர்போசார்ஜர் மற்றும் சூப்பர்சார்ஜர்களுடன் இணைந்து செயல்புரியும் அம்சங்களையும் இந்த எஞ்சின்கள் கொண்டிருக்கும். தற்போதைய எஞ்சின்களைவிட இவை கூடுதல் எரிபொருள் சிக்கனம், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ், குறைந்த கார்பன் புகை வெளியிடும் அம்சங்களை கொண்டிருக்கும்.

மேலும், இந்த புதிய டீசல் எஞ்சின் மூலம் டீசல் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாத்தில் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும் வால்வோ பெருமிதம் தெரிவித்துள்ளது. எஸ்60, வி60 மற்றும் எக்ஸ்சி60 கார்களில் முதலில் 2.0 லிட்டர் டிரைவ் இ டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

Volvo New Engine

இந்த எஞ்சின்கள் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

டிரைவ் இ டீசல் எஞ்சின்கள் 118 பிஎச்பி முதல் 227 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், புதிய பெட்ரோல் எஞ்சின்கள் 138 பிஎச்பி முதல் 300 பிஎச்பி.,க்கும் அதிகமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
English summary
Volvo's plan is to power its entire product offering with 4 cylinder engines, replacing all existing 6 and 8 cylinder mills. The new range, which was during development clubbed under the Volvo Engine Architecture (VEA) name, will henceforth be referred to as Drive-E engines.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X