பவர்ஃபுல் வால்வோ போல்ஸ்டார் கார்களின் விபரம் வெளியீடு

By Saravana

வால்வோ நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவான போல்ஸ்டார் எஸ்60 செடான் காரின் அடிப்படையிலான 2 புதிய பவர்ஃபுல் மாடல்களை வெளியிட்டுள்ளது.

வால்வோ போல்ஸ்டார் எஸ்60 செடான் மற்றும் வி60 வேகன் என்ற அந்த இரு புதிய மாடல்கள் சாதாரண எஸ்60 செடான் காரைவிட அதிக சக்தி கொண்ட எஞ்சின் மற்றும் அதற்கு தக்கவாறான சிறப்பு ஆக்சஸெரீஸ்களையும் பெற்றுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு கார் மாடல்களிலும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சினின் இசியூ.,வில் போல்ஸ்டார் மாறுதல்களை செய்துள்ளது. இதனால், இந்த எஞ்சின் 345 எச்பி ஆற்றலையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும் கூடுதல் சக்தியை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது.

 கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

இந்த இரு கார்களிலும் இருக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அனைத்து வீல்களுக்கும் எஞ்சின் பவரை கடத்தும். பேடில் ஷிப்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் கிட்

ஸ்பெஷல் கிட்

இந்த இரு கார்களிலுமே போல்ஸ்டாரின் பிரத்யேக ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பிளிட்டர்கள் கொண்ட முன்பக்க பம்பர், ரியர் ஸ்பாய்லர், ரியர் டிஃபியூஷர் மற்றும் 20 இஞ்ச் அலாய் வீல் ஆகியவை போல்ஸ்டார் பூட்டியுள்ள சிறப்பு ஆக்சஸெரீஸ்களாக கூறலாம்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0 - 100 கிமீ வேகத்தை இரு மாடல்களும் 4.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

அதிசக்தி வாய்ந்ததாக மாற்றப்பட்டிருக்கும் இந்த கார்களின் கையாளுமை சிறப்பாக இருக்கும் வகையில், ஓலின்ஸ் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர, 6 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 14.6 இஞ்ச் பிரெம்போ டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு முதல் கனடா, நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மார்க்கெட்டுகளில் இந்த கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. வெளிப்புறத் தோற்றம், இன்டிரியர், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் சிறந்த மாடல்களாக இவை இருக்கும் என வால்வோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
English summary
Polestar, the motorsports and performance tuning division of Volvo has revealed the production versions of the Volvo S60 sedan and V60 wagons. Based on the standard S60 & V60 T6 trim, the Polestar version offer more power, more performance, with the promise of more fun.
Story first published: Thursday, November 28, 2013, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X