100 ஆட்டோமேட்டிக் கார்களை இயக்கி சோதனை செய்ய வால்வோ திட்டம்!

By Saravana

டிரைவர் இல்லாமல் இயங்கும் 100 ஆட்டோமேட்டிக் கார்களை பொது போக்குவரத்து கொண்ட சாலைகளில் இயக்கி சோதனை நடத்த வால்வோ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளை வால்வோ துவங்குகிறது.

டிரைவர் துணையில்லாமல் இயங்கும் ஆட்டோமேட்டிக் கார் தொழில்நுட்பத்தை உருவாக்குதற்கு உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கூகுள், நிசான் என பல முன்னணி நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கார் தொழில்நுட்பத்தை தயாரித்து சோதனைகள் செய்து வருகின்றன. இதேபோன்று, சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனமும் ஆட்டோமேட்டிக் கார் தயாரிப்பில் முனைப்புடன் இறங்கியுள்ளது.

சுவீடனில் சோதனை

சுவீடனில் சோதனை

வால்வோவின் தாயகமான சுவீடனின் கோதென்பர்க் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் 100 ஆட்டோமேட்டிக் கார்களை சோதனை செய்ய வால்வோ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு வால்வோ தயாரித்துள்ள ஆட்டோமேட்டிக் கார் தொழில்நுட்பம் முதலாவதாக எக்ஸ்சி90 எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 கூட்டு

கூட்டு

சுவீடன் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து இந்த ஆட்டோமேட்டிக் கார்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது வால்வோ. கோதென்பர்க் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் நகரை சுற்றிய பகுதிகளில் 50 கிமீ தூரத்துக்கு இந்த கார்கள் சோதனை செய்யப்படும்.

 முதல் கட்டம்

முதல் கட்டம்

அடுத்த ஆண்டு முதல் பல கட்டங்களாக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் சோதனைகள் செய்யப்பட உள்ளன. அப்போது ஆட்டோமேட்டிக் கார்களின் செயல்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன.

2017 முதல்...

2017 முதல்...

இந்த சோதனைகளில் திருப்தி ஏற்பட்ட பின் 2017ல் முழு அளவில் ஆட்டோமேட்டிக் கார்களை பயன்படுத்தி சோதனை செய்ய வால்வோ திட்டமிட்டுள்ளது.

 தானியங்கி பார்க்கிங்

தானியங்கி பார்க்கிங்

வால்வோ முன்பு செயல்விளக்கம் காட்டிய தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் வசதியும் ஆட்டோமேட்டிக் கார்களில் இருக்கும். மேலும், ஆட்டோமேட்டிக் காரை எளிதாக டிரைவர் இயக்கும் வகையில் மாற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும்.

சவால்

சவால்

இந்த கார்களை சாலையில் நேரடியாக இயக்கி பார்ப்பதன் மூலம் உண்மையான பின்னூட்டங்களை பெற முடியும். தொழில்நுட்ப அளவில் பல சவால்கள் நிறைந்த திட்டம் இது என்று வால்வோ கார் குழுமத்தின் தலைவர் ஹகன் சாமுவேல்சன் கூறியுள்ளார்.

வீடியோ

வால்வோ ஆட்டோமேட்டிக் கார் செயல்விளக்க வீடியோ.

Most Read Articles
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
English summary
Its now common knowledge that several automakers are working on developing self driving cars, also called autonomous drive vehicles. Mercedes-Benz, Nissan, Volvo among others, have already showcased their capabilities. But now Volvo wants to take it to the next level by running 100 automatic cars in the Swedish city of Gothenburg.
Story first published: Wednesday, December 11, 2013, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X