300 கிமீ வேகத்தில் சாலை தடுப்பில் மோதி சுக்கு நூறான ஃபெராரி கார்!

கடந்த வாரம் ஜெர்மனியில் 300 கிமீ வேகத்தில் சென்ற ஃபெராரி கார் டயர் வெடித்ததால் விபத்தில் சிக்கி தூள் தூளானது. ஜெர்மனியை சேர்ந்த மார்கஸ்(41) என்பவர் தனது மனைவி ஏஞ்சலாவுடன் ஃபெராரி எஃப் 430 கார் ஒன்றில் ஏ7 ஆட்டோபான் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

ஜெர்மனியின் மிக நீளமான நெடுஞ்சாலையாக கூறப்படும் இந்த சாலையில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் வலது பக்க பின்புற டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோர இரும்பு தடுப்பு மோதி சுக்கு நூறானது. ஆனால், அந்த காரில் பயணம் செய்த மார்க்கஸும், அவரது மனைவி ஏஞ்சலாவும் சிறு காயங்கள் கூட இல்லாமல் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் ஃபெராரி எஃப் 430 கார் சுக்குநூறானது. எத்துனை பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இருந்தாலும், அதிவேகத்தில் செல்வதை தவிர்ப்பது அவசியம் என்பது இந்த நிகழ்விலிருந்து புலப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஃபெராரி எஃப் 430 காரின் படங்களையும், அடுத்து ஃபெராரி எஃப் 430 காரின் சாதாரண படங்களையும் காணலாம்.

விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்

விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்

விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்

விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்

 ஃபெராரி எஃப் 430

ஃபெராரி எஃப் 430

 ஃபெராரி எஃப் 430

ஃபெராரி எஃப் 430

 ஃபெராரி எஃப் 430

ஃபெராரி எஃப் 430

Most Read Articles
English summary
We are not talking about a crash test here, but about a Ferrari involved in an actual accident when travelling at 300 km/h. The answer is, it gets wrecked. Totally destroyed. This incident occurred on May 1st on a German highway.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X