டட்சன் கார் விலை என்னவாக இருக்கும்?- ஓர் அலசல்

வரும் 15ந் தேதி டட்சன் பிராண்டின் முறைப்படியான அறிமுக விழா குர்கானில் நடைபெற உள்ளது. மேலும், அன்றைய தினம் டட்சன் பிராண்டின் முதல் ஹேட்ச்பேக் காரையும் நிசான் அறிமுகப்படுத்த உள்ளது.

கே2 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரை வைத்து பெரும் வர்த்தக இலக்கை பிடிக்க நிசான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் மைக்ரா ஆக்டிவ் கார் ரூ.3.5 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அடுத்து அனைவரின் கேள்வியும், அப்படியெனில் டட்சன் காரின் விலை என்னவாக இருக்கும் என்பதே. அதுகுறித்து சிறிய அலசலை ஸ்லைடரில் காணலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

முதலில் வந்த தகவல்கள் டட்சன் பிராண்டின் சிறிய கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சத்தில் வரும் என கூறின. ஆனால், தற்போது மைக்ரா ஆக்டிவ் கார் ரூ.3.5 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளதால், நிலைமை தலைகீழாகிவிட்டது.

டட்சன் கே2 கார்

டட்சன் கே2 கார்

மைக்ரா கே12 பிளாட்பார்மில்தான் இந்த புதிய கே2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட டட்சன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட டிசைன் கொண்டதாக இருக்கும்.

வசதிகள் இருக்காது

வசதிகள் இருக்காது

விலை குறைப்பிற்காக மைக்ராவில் இருக்கும் ஏபிஎஸ், பவர் விண்டோஸ், எல்இடி விளக்குகள், கப் ஹோல்டர்கள் உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் இந்த காரில் இடம் பெறாது.

எஞ்சின்

எஞ்சின்

3 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட காராக இதை நிலைநிறுத்த நிசான் முடிவு செய்துள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் புதிய டட்சன் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

விலை

விலை

ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான், செவர்லே ஸ்பார்க் ஆகியவற்றிற்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில், இந்த காரை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.0 லட்சத்திற்குள் நிசான் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மைக்ரா ஆக்டிவ் காரை விட ரூ.25,000 முதல் ரூ.50,000 குறைவான விலையில் வரும் என தெரிகிறது.

உங்களது கணிப்பு என்ன?

உங்களது கணிப்பு என்ன?

டட்சன் பிராண்டில் வர இருக்கும் கே2 காரின் விலை என்னவாக இருக்கும்?. உங்களது கருத்தை எழுதுங்கள்.

Most Read Articles
English summary
Here is an analysis about the price of upcoming Datsun small hatchback which is codenamed as K2.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X