சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

சத்தமில்லாமல் சந்தையில் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில், உட்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன், கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் முன்பைவிட 10 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று கூடுதலான விலையில் வந்திருக்கும் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் கண்ணோட்டத்தை ஸ்லைடரில் காணலாம்.


வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

புதிய பம்பர், பெரிய ஏர்டேம், தேன்கூடு வடிவ முகப்பு கிரில் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், குரோம் வளையத்துடன் கூடிய பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்டுகளில் புதிய டிசைன் வீல் கேப்புகளும், டாப் வேரியண்ட்டில் புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. காரின் பொதுவான தோற்றத்தில் மாறுபாடு அதிகமில்லை.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 84 பிஎச்பி பவரையும், 115என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,197சிசி கே சீரிஸ் விவிடி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 75 பிஎச்பி பவரையும், 190என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,248சிசி டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

முந்தைய மாடலைவிட பெட்ரோல், டீசல் மாடல்கள் 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என மாருதி தெரிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பேஸ் வேரியண்ட் வசதிகள்

பேஸ் வேரியண்ட் வசதிகள்

இன்டிரியரை பொறுத்தவரை கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எல்எக்ஸ்ஐ மற்றும் எலடிஐ வேரியண்ட்டுகளில் பின்புற இருக்கையில் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட்டுகள், 60:40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் இருக்கைகள் உள்ளன. மேலும், எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் என்ற புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், பவர் விண்டோ மற்றும் ரிமோட் லாக்கிங் வசதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன.

மிட் வேரியண்ட் வசதிகள்

மிட் வேரியண்ட் வசதிகள்

விஎக்ஸ்ஐ பெட்ரோல் மற்றும் விடிஐ டீசல் மிட் வேரியண்ட்டுகளில் ஆடியோ பிளேயர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடிஐ டீசல் வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட் காரில் அதிகம் விற்பனையாகும் வேரியண்ட்டாகவும் இது இருப்பது குறிப்பிடத்தக்கது.

 டாப் வேரியண்ட் வசதிகள்

டாப் வேரியண்ட் வசதிகள்

இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ வேரியண்ட்டுகலில் எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, ரியர் பார்க்கிங் சென்சார்கள், புளுடூத் வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர் போன்றவை முக்கிய வசதிகளாக இருக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல் மாடல்

எல்எக்ஸ்ஐ: ரூ.4.42 லட்சம்

எல்எக்ஸ்ஐ(ஓ): ரூ.4.49 லட்சம்

விஎக்ஸ்ஐ: ரூ.5.08 லட்சம்

இசட்எக்ஸ்ஐ: ரூ.5.90 லட்சம்

டீசல் மாடல்

எல்டிஐ: ரூ.5.56 லட்சம்

விடிஐ: ரூ.6 லட்சம்

இசட்டிஐ: ரூ.6.95 லட்சம்


Most Read Articles
English summary
Japanese automobile giant Maruti Suzuki has launched its refreshed Swift hatchback on 28th October, 2014. The refreshed model gets minor exterior upgrades, along with interior upgrades.
Story first published: Wednesday, October 29, 2014, 9:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X