உலக அளவில் 1.1 மில்லியன் கார்களை திரும்ப அழைக்கும் ஃபோக்ஸ்வேகன்!

சஸ்பென்ஷன் பிரச்னையை சோதித்து பார்ப்பதற்காக 1.1 மில்லியன் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது.

வட அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் பின்புற சஸ்பென்ஷனில் பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா, கனடா, சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 1.1 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trailing Arm Rest

அமெரிக்காவில் 4,42,265 கார்களும், கனடாவில் 1,26,000 கார்களும், சீனாவில் 5,81,090 கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன. கனடாவில் 2011 முதல் 2013 வரை தயாரிக்கப்பட்ட ஜெட்டா கார்களும், 2012 முதல் 2013 வரை தயாரிக்கப்பட்ட பீட்டில் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன. சீனாவில் சகிட்டர் என்ற ஜெட்டா வேரியண்ட்டும், பீட்டில் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

காரின் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பில் இருக்கும் ட்ரெயிலிங் ஆர்ம் என்ற பாகத்தில் தெறிப்பு ஏற்பட்டு முறிந்து போகும் ஆபத்து இருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து, அதற்கு உறுதுணையாக புதிய உலோக பாகத்தை பொருத்தி தர இந்த திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
German automaker Volkswagen AG is recalling more than 1.1 million cars globally for a potential rear suspension system problem.
Story first published: Thursday, October 23, 2014, 9:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X