ஜேஎல்ஆர் டீலர் வளாகத்தில் தீ விபத்து: 19 உயர்ரக கார்கள் எரிந்து நாசம்!

By Saravana

அமெரிக்காவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டீலர்ஷிப் வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 19 உயர் வகை கார்கள் தீயில் கருதி நாசாமாகின. மாசாசூட்ஸ் மாகாணத்தின் சட்பரி என்ற இடத்தில் இருக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர் டீலர்ஷிப்பில்தான் இந்த தீவிபத்து நிகழ்ந்தது.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 19 உயர்வகை கார்கள் தீயில் கருகி சாம்பலாயின.


 உயர்வகை கார்கள்

உயர்வகை கார்கள்

லேண்ட்ரோவர் எஸ்யூவிகள், ஜாகுவார் கார்கள் என 15 கார்கள் தீயில் முற்றிலுமாக கருகி சாம்பலாகிவிட்டதாகவும், 5 கார்கள் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பு

மதிப்பு

தீ விபத்தில் எரிந்து சாம்பலான கார்களின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து கார்களும் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டிருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 விசாரணை

விசாரணை

இந்த தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் தீவிபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக போலீசார் கூறினர்.

 பிளாஸ்டிக் பாகங்கள்

பிளாஸ்டிக் பாகங்கள்

தற்போது வரும் கார்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பாகங்களால் பயன்படுத்தப்படுவதால், தீ வேகமாக பரவி பல கார்களை நாசப்படுத்திவிட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

டீலர் அதிர்ச்சி

டீலர் அதிர்ச்சி

இந்த தீவிபத்து சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக டீலர்ஷிப் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Source: wcvb.com, Via: Carbuzz

Most Read Articles
English summary
At least 19 vehicles caught fire and burned at a Land Rover/Jaguar dealership in Sudbury in US.
Story first published: Thursday, September 25, 2014, 12:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X