இந்தியாவில் ஜாகுவார் எஃப் டைப் கூபே கார் விற்பனைக்கு வந்தது!

By Saravana

உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும், ஜாகுவார் எஃப் டைப் காரின் கூபே மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட ஜாகுவார் எஃப் டைப் காரின் நிரந்தர கூரை அமைப்பு கொண்ட கூபே மாடல்தான் இது.

இந்த புதிய கூபே மாடல் மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உறுதியான கட்டமைப்பு

உறுதியான கட்டமைப்பு

கன்வெர்ட்டிபிள் மாடலைவிட நிரந்தர கூரை அமைப்பு கொண்டதாக வந்திருக்கும் இந்த கார் 30 சதவீதம் கூடுதல் உறுதித்தன்மை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பேஸ் மாடலில் 340 பிஎஸ் பவர் கொண்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 380 பிஎஸ் பவர் கொண்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின் மாடல் மிட் வேரியண்ட்டாக வந்திருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 550 பிஎஸ் பவரை அளிக்கும் சக்தி கொண்டது. கன்வெர்ட்டிபிளை விட இது 60 பிஎஸ் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு குயிக் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

டின்ட் ரூஃப்

டின்ட் ரூஃப்

இந்த காரின் கூபே மாடலில் டின்ட் செய்யப்பட்ட கண்ணாடி கூரை ஆப்ஷனல் ஆக்சஸெரீயாக கிடைக்கிறது. இது காரின் அழகை பன்மடங்கு கூட்டுவதாக இருக்கிறது. இதுதவிர, அலுமினியம் கூரை கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

அடாப்டிவ் ஸ்பாய்லர்

அடாப்டிவ் ஸ்பாய்லர்

பூட் லிட் மேல்புறம் பொருத்தப்பட்டிருக்கும் அடாப்டிவ் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. கார் மணிக்கு 112 கிமீ வேகத்தை தாண்டும்போது தானாக இந்த ஸ்பாய்லர் இயங்க ஆரம்பித்துவிடும். இதன்மூலம், காருக்கு கூடுதல் நிலைத்தன்மையுடன் செல்ல உதவும்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

கன்வெர்ட்டிபிள் மாடலைவிட இந்த கார் 50 பவுண்ட் வரை எடை குறைவானது என்பதுடன், சேஸீ மிகுந்த உறுதியுடன் இருப்பதால் சிறந்த ஓட்டுதல் தரத்தை வழங்கும் என்கிறது ஜாகுவார்.

விலை

விலை

ஜாகுவார் எஃப் டைப் கூபே மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.1.21 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.1.82 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
Story first published: Thursday, February 20, 2014, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X