பண்டிகை கால லிஸ்டில் இடம்பிடித்த மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

இந்தியாவின் பி செக்மென்ட் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஸ்விஃப்ட் கார் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வர இருக்கிறது. வரும் பண்டிகை காலத்தையொட்டி இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கும் ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் மற்றும் மாறுதல்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


இந்தியாவில் ஸ்விஃப்ட்

இந்தியாவில் ஸ்விஃப்ட்

2005ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்விஃப்ட் முதலில் பெட்ரோல் மாடலில் மட்டும் வந்தது. 2007ம் ஆண்டில் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 2011ம் ஆண்டில் புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தற்போது தோற்றத்தில் சிறிய மாறுதல்கள் செய்து புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்தியா வர இருக்கும் பேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தோற்றத்தில் மாற்றங்களாக கூற வேண்டுமெனில், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய பனி விளக்குகளின் அறை மற்றும் பம்பர் டிசைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

புதிய 16 இஞ்ச் அலாய் வீல்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்படும். அலாய் வீல்கள் இல்லாத மாடல்களுக்கு புதிய டிசைனிலான வீல் கவருடன் வருகிறது. இப்போது இருக்கும் வண்ணங்களை தவிர்த்து, புதிதாக நீல வண்ணத்திலும் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

ஃபேப்ரிக் இருக்கைகள், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், எலக்ட்ரானிக் நுட்பத்தில் இயங்கும் ரியர் வியூ கண்ணாடிகள், ஒன் டச் முறையில் முன் பக்க கண்ணாடி ஜன்னல்களை ஏற்றி, இறக்கிக்கொள்ளும் வசதி இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் எந்தவித மாற்றங்களும் இருக்காது. 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும்.

 விலை

விலை

எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், ஸ்டார்ட் ஸ்டாப் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் வரும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X