இன்டிரியரில் மாற்றங்களுடன் புதிய ரெனோ பல்ஸ் கார் அறிமுகம்!

By Saravana

நிசான் மைக்ராவின் ரீபேட்ஜ் மாடலான ரெனோ பல்ஸ் விற்பனையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு நிசான் மைக்ராவின் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால், ரெனோ பல்ஸ் காரில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், ரெனோ பல்ஸ் காரின் இன்டிரியரில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பீஜ் வண்ணத்திலான சென்டர் கன்சோலுக்கு பதிலாக புதிய மைக்ராவில் இருப்பது போன்ற கருப்பு நிற பியானோ பிளாக் கிளாஸி பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

Reno Pulse car

இதுதவிர, நிசான் மைக்ராவில் இருக்கும் அதே 2 டின் ஆடியோ சிஸ்டம் தற்போது ரெனோ பல்ஸ் காரிலும் இடம்பெற்றுள்ளது. புதிய சீட் கவர்களுடன் சற்று புதுப்பொலிவுடன் கிடைக்கிறது ரெனோ பல்ஸ்.

Reno Pulse Interior

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. அதிகபட்சமாக 75 எச்பி பவரை அளிக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிகபட்சமாக 63 எச்பி பவரை அளிக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
The Nissan Micra-based Renault Pulse has remained unchanged till now even as the Micra was given a major facelift last year. Renault has finally decided to catch up to the new Micra by making some improvements to its B-segment hatchback.
Story first published: Wednesday, May 28, 2014, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X