ஜூலையில் அறிமுகமாகிறது ஸ்கோடா யெட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

டிசைனில் மாறுதல்கள், கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்கோடா யெட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனால், புதிய யெட்டி மாடலுக்காக ஸ்கோடா பிரியர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், வரும் ஜூலை மாதம் ஸ்கோடா யெட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வழக்கம்போல் எந்த மாடலுடனும் ஒட்டாத இடத்தில் இந்த புதிய மாடலும் நிலைநிறுத்தப்பட உள்ளது.


டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

2014 மாடலாக விற்பனைக்கு வரும் புதிய யெட்டி கிராஸ்ஓவரில் வண்ணத்துப் பூச்சி வடிவிலான முன்பக்க கிரில், மறுவடிவமைப்பு பெற்ற ஹெட்லைட், பம்பர் மற்றும் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய பனி விளக்குகள் போன்றவற்றால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய அலாய் வீல்கள் டிசைன், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்கிட் பிளேட் போன்றவையும் யெட்டிக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

டியூவல் ஸோன் ஏசி, பனரோமிக் சன்ரூஃப், டிரைவர் இருக்கை, ஆப்டிக்கல் பார்க்கிங் அசிஸ்ட், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அதில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்றவற்றுடன் வருகிறது. சற்று பெரிய டயல்களுடன் கூடிய ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோமீட்டருடன் வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய யெட்டியிலும் உயிர் கொடுக்கும். 110 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் ட்யூனிங் கொண்டதாகவும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக ஒரு மாடல் கிடைக்கும். இது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இரண்டாவதாக, 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மற்றொரு மாடல் கிடைக்கும். டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 விலை

விலை

தற்போது ரூ.15.19 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஸ்கோடா யெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைவிட 2014 மாடலாக வரும் புதிய யெட்டி சற்று கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். புதிய ஸ்கோடா யெட்டி மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் எந்தளவு வரவேற்பு கொடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.

Most Read Articles
English summary
Skoda will be giving a long-awaited facelift to their Yeti SUV. The 2014 Yeti is slated for a July launch and will receive changes to the exterior and interior styling. The 2014 version of the Yeti was first showcased at the 2014 Auto Expo in New Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X