மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ விபரங்கள் வெளியானது

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய 2014 மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வரும் மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய போலோ கார் வருகிற மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

சிறிய அளவிலான மாற்றங்களுடன் 2014 மாடல் வர இருக்கிறது. புதிய பம்பர், புதிய ஹெட்லைட் மற்றும் எல்இடி விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் ஆகியவற்றுடன் வசீகரம் கூட்டப்பட்டுள்ளது. தவிர, ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகளை இணைக்கும் விதத்தில் மெல்லிய குரோம் மற்றும் உலோக கம்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன. டெயில்லைட்டுகளிலும் சிறிய மாறுதல்களை செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன். அலாய் வீல்களின் டிசைனும் புதிது.

புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

ஐரோப்பிய மாடல் போலோ கார்களில் மோதல் தடுப்பு தொழில்நுட்பம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி பிரேக் சிஸ்டம், புதிய சஸ்பென்ஷன் என பல புதிய தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும். இந்திய மாடலில் இவை அனைத்தும் இருக்குமா என்பது சந்தேகமே.

 இன்டிரியர்

இன்டிரியர்

இது ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் போலோ கார். இதன் இன்டிரியரில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல், கலர் டிஸ்ப்ளே மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இருக்கும் மாடலில் இத்துனை மாற்றங்களும் செய்யப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

ஐரோப்பிய மார்க்கெட்டில் ஏராளமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். இவை அனைத்தும் யூரோ6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. இது தற்போதைய எஞ்சின்களைவிட 21 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும்.

இந்தியாவுக்கான எஞ்சின்கள்

இந்தியாவுக்கான எஞ்சின்கள்

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வழங்கப்படும் எஞ்சின் ஆப்ஷன்கள் இந்தியாவில் கொடுக்கப்படாது. இந்தியாவில் 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் வரும். இதுதவிர, 1.2 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும், 1.6 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மாடலும் டாப் வேரியண்ட்டுகளாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X