விரைவில் வருகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

By Saravana

பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், இந்தியாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் மாடல்களில் முதன்மையானதாக போலோ விளங்குகிறது. எனவே, பாதுகாப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த காருக்காக தற்போது வெயிட்டிங். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கின்றன.

Polo Facelift

ஐரோப்பிய மார்க்கெட்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இந்த புதிய மாடல் பல்வேறு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக, வரிச்சலுகை பெறும் விதத்தில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இது 105 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

இந்த எஞ்சினுடன் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். இதேபோன்று, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் 105 எச்பி பவரை கொண்டதாக இருக்கும் என்பதோடு, இதுவும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இதுதவிர, 75 எச்பி பவர் கொண்ட மற்றொரு 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஏர்பேக்குகளுடன் கிடைப்பதால், இந்த செக்மென்ட்டின் பாதுகாப்பான காராக குறிப்பிடப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிது விலை அதிகமாக இருக்கும்.

Most Read Articles
English summary
The new VW Polo hatchback is one facelift model that we are eagerly looking forward to. Launched in Europe earlier this year, the 2014 VW Polo is a minor update over the outgoing Polo, but it still makes the car look significantly better and mature.
Story first published: Tuesday, April 29, 2014, 9:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X