2015 டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி ஹெல்கேட்... உலகின் அதிசக்திவாய்ந்த செடான் கார்!

அமெரிக்காவின் டெட்ராய்டில் நடந்த நிகழ்ச்சியில் புதிய டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி ஹெல்கேட் சூப்பர் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல் உலகின் அதிசக்திவாய்ந்த செடான் கார் என்ற பெருமையுடன் வந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹெல்கேட் காரைவிட பல விதத்திலும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அதிகசக்திவாய்ந்ததாக வந்துள்ளது. உலகின் அதிசக்திவாய்ந்த செடான் கார் என்ற பெருமையுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடலைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹெல்கேட் காரில் பொருத்தப்பட்டிரு்ககும் அதே 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சகமாக 707 எச்பி பவரை வாரி வழங்கும். மேலும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.

பவர்ஃபுல் செடான்

பவர்ஃபுல் செடான்

560 எச்பி பவர் கொண்ட பிஎம்டபிள்யூ எம்5 கார், 550 எச்பி பவர் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் இ63 மற்றும் 560 எச்பி பவர் கொண்ட ஆடி ஆர்எஸ்6 ஆகிய கார்களைவிடவும் இது அதிசக்திவாய்ந்தது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த புதிய டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி ஹெல்கேட் கார் 0- 96 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 328 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வல்லமை கொண்டது. 20 இஞ்ச் அலாய் வீல்களுடன், 6 பிஸ்டன் பிரெம்போ கிளாம்பர்கள் கொண்ட 15.4 இஞ்ச் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வசதிகள்

வசதிகள்

டிராக்கில் செலுத்தும்போது பயன்படும் விசேஷ அப்ளிகேஷன்கள், பெர்ஃபார்மென்ஸ் செட்டிங்குகளை மாற்றிக் கொள்ளும் வசதியை தரும் திரை போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு சாவி அதிகபட்ச பவரை பெற விரும்பும்போது எஞ்சினை அன்லாக் செய்வதற்காக பயன்படும்.

விற்பனை

விற்பனை

விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அமெரிக்காவில் இந்த புதிய சூப்பர் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டாட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The new 2015 Dodge Charger SRT Hellcat Powerful super sedan unveiled in Detroit. The 2015 Charger SRT Hellcat Powered by the 707 horsepower 6.2-liter supercharged engine, can cover a top speed of 328 kph – laying claim to the titles of quickest and fastest sedan in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X