உருவத்தை முற்றிலும் மாற்றி வந்த புதிய டொயோட்டா கேம்ரி!

By Saravana

அமெரிக்காவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி. ஆனால், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்திற்குள்ளே சுழன்று வருகிறது.

இந்த நிலையில், இளைய வாடிக்கையாளர்களையும் கவரும் வண்ணம் கேம்ரிக்கு புதிய டிசைனை அப்ளை செய்துள்ளது டொயோட்டா. 2015 மாடலாக வரும் இந்த புதிய கேம்ரி கார் நியூயார்க் ஆட்டோ ஷோவில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேம்ரி காரின் படங்கள் மற்றும் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

 இரண்டு மாடல்

இரண்டு மாடல்

இரண்டு புதிய மாடல்களில் கேம்ரி வந்துள்ளது. ஸ்போர்ட் எக்ஸ்எஸ்இ மற்றும் ஹைபிரிட் எஸ்இ ஆகிய மாடல்களில் கிடைக்கும். முந்தைய மாடலைவிட நீளத்தில் 1.8 இஞ்ச் அளவிற்கும், அகலத்தில் 0.4 இஞ்ச் அளவிற்கும் கூடியிருக்கிறது.

எக்ஸ்எஸ்இ வேரியண்ட்

எக்ஸ்எஸ்இ வேரியண்ட்

புதிய கேம்ரியின் எக்ஸ்எஸ்இ வேரியண்ட்டில் சரிவக வடிவிலான கிரில், புதிய ஸ்போர்ட்ஸ் ஷாக் அப்சார்பர், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் புரொகிராம் மற்றும் 18 இஞ்ச் அலாய் வீல்கள் போன்றவை இளைஞர்களை கவரும் அம்சங்களாக இருக்கும்.

ஹைபிரிட் எக்ஸ்இ

ஹைபிரிட் எக்ஸ்இ

இந்த புதிய வேரியண்ட்டில் சரிவக வடிவிலான கிரில்லில் படுக்கைவாட்டில் பட்டைகள் கொண்டதாக இருக்கிறது. புதிய பம்பர், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் போன்றவை குறப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் டெயில் லைட்டுகளை இணைக்கும் விதத்தில் குரோம் பட்டை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் குழாய்கள் இருப்பது கூடுதல் கவர்ச்சி.

 இன்டிரியர்

இன்டிரியர்

பிரிமியமாக காட்சி தரும் வகையில் இன்டிரியரை பார்த்து பார்த்து இழைத்துள்ளனர் டொயோட்டா டிசைன் பொறியாளர்கள். தரம் மிளிரும் உதிரிபாகங்களுடன், உயர்ரக லெதர் இருக்கைகள் கேம்ரியின் அந்தஸ்தை கொடுக்கும் அம்சங்கள். முந்தைய மாடலைவிட கேபினில் 30 அளவுக்கு சப்தம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல் மறுவடிவமைப்பு செய்து, அதில் கலர் டிஸ்ப்ளே உள்பட பல்வேறு வசதிகளை பெறுவதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. சார்ஜ் போடும்போது மொபைலை வைப்பதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12v சார்ஜர், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஸ்மார்ட்போன்களை வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

அம்சத்தை கொடுக்கும் திரை

அம்சத்தை கொடுக்கும் திரை

புதிய 4.2 இஞ்ச் கொண்ட டிஎஃப்டி வண்ண திரை பல்வேறு வசதிகளை ஒருங்கே அளிக்கும்.இன்டிரியருக்கு கவர்ச்சியை கொடுக்கும் டிஎஃப்டி திரையை நெருக்கமாக பார்க்கலாம்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 2.5 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டிற்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் இணைந்து செயலாற்றும். ஹைபிரிட் வேரியண்ட்டில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிங் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், இ - சிவிடி டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க மார்க்கெட்டில் இந்த புதிய கேம்ரி மாடல் விற்பனைக்கு செல்கிறது.

Most Read Articles
English summary
Toyota Corolla has been one of the best selling cars in the U.S. for many years despite its bland, uninspiring design, thanks to its other often-lauded characteristics, which are reliability and ease of use. With the 2015 Camry, however, that changes for the better.
Story first published: Saturday, April 19, 2014, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X