ஃபோக்ஸ்வேகனின் புதிய இ- கோல்ஃப் எலக்ட்ரிக் கார் அறிமுகம்!

By Saravana

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய இ- கோல்ஃப் எலக்ட்ரிக் காரின் படங்கள் மற்றும் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்த புதிய கார் விற்பனைக்கு வருகிறது.

இந்த புதிய எலக்ட்ரிக் கார் ஃபோர்டு ஃபோகஸ், நிசான் லீஃப் போன்ற மாடல்களுடன் போட்டியிடும். இந்த புதிய எலக்ட்ரிக் காரின் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

ஃபோக்ஸ்வேகன் இ- கோல்ஃப் எலக்ட்ரிக் காரில் 114 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டாருக்கு லித்தியம் அயான் பேட்டரி மின் சப்ளையை வழங்கும்.

பகல் நேர ரன்னிங் விளக்குகள்

பகல் நேர ரன்னிங் விளக்குகள்

ஹெட்லைட்டுகளை ஒட்டியிருக்கும் 'சி' வடிவ பகல்நேர ரன்னிங் விளக்குகள் அழகூட்டுகின்றன.

மாற்றம்

மாற்றம்

பக்கவாட்டில் பார்ப்பதற்கு பிற கோல்ஃப் மாடல்களை போன்று இருந்தாலும், இதன் வீல்கள் டிசைன் மாறுபட்டதாக இருக்கும்.

 எல்இடி டெயில்லைட்

எல்இடி டெயில்லைட்

இந்த காரின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்ப்டடுள்ளன. மேலும், இது எலக்ட்ரிக் கார் என்பதால் எக்சாஸ்ட் குழாய்க்கு வேலை இல்லை.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது. மேலும், 0- 100 கிமீ வேகத்தை 104 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 140 கிமீ வேகத்தில் செல்லும்.

Most Read Articles
English summary
Volkswagen has revealed to us their new electric car the E-Golf, which they plan to launch in the coming year of 2015. Their new car is not a hybrid it is an electric car. It will be sold alongside its conventional siblings the standard Golf, the I and its racy hot hatch Golf R.
Story first published: Thursday, March 20, 2014, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X