படு அசத்தலாக வரும் பென்ட்லீயின் முதல் எஸ்யூவியின் தகவல்கள்!

By Saravana

படு அசத்தலாக வரும் புதிய பென்ட்லீ எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி 2 லட்சம் டாலர் விலையில் வர இருக்கிறது.

போர்ஷே கேயென் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஆடம்பர எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி, போட்டியாளர்களைவிட மிக சொகுசாக இருக்கும் என்று பென்ட்லீ கூறியிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் ஹைபிரிட் மாடல்

முதல் ஹைபிரிட் மாடல்

இந்த புதிய எஸ்யூவி போர்ஷே கேயென் எஸ் டீசல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. தவிர, ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட மாடலிலும் இந்த எஸ்யூவி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இதுதான் பென்ட்லீயின் முதல் ஹைபிரிட் எஸ்யூவி மாடலாக இருக்கும்.

முகப்பு தோற்றம்

முகப்பு தோற்றம்

பென்ட்லீயின் பாரம்பரிய டிசைனுடன் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்டும், பனிவிளக்குகளும் ஒரே மாதிரியான டிசைனில் இருக்கின்றன. முகப்பு கிரில் பிற பென்ட்லீ கார்களில் இருப்பது போன்றே தோற்றமளிக்கிறது. ஸ்கிட் பிளேட்டுகளும் இந்த எஸ்யூவியின் அம்சத்திற்கு வலு சேர்க்கிறது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

பின்புறத்தில், பழமையான எஸ்யூவி டிசைன் தாத்பரியங்கள் கையாளப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுடன் இயைந்து நிற்கும் எக்சாஸ்ட் குழாய்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை கம்பீரத்தை கூட்டுவதாக அமைகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில் தனது கைவண்ணத்தை முழுமையாக காட்டியிருக்கிறது பென்ட்லீ. மரவேலைப்பாடுகள் நிறைந்த டேஷ்போர்டு, உயர் ரக லெதர் பினிஷ், குரோம் பூச்சுகள் போன்றவை இந்த எஸ்யூவியின் அந்தஸ்தை பளிச்சென்று காட்டுகிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த ஆடம்பர எஸ்யூவியில் கால் வைப்பதற்கான லெக்ரூம் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது இரண்டாவதாக, ஆடம்பர வசதிகளுக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று பென்ட்லீ விரும்புகிறது. பிரிமியம் லெதர் இருக்கைகள் கூடுதல் சொகுசை வழங்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

பின்புற கதவு இரண்டு பிரிவுகளாக திறக்கும் வசதி கொண்டது. இதனால், பொருட்களை வைப்பதும், எடுப்பதும் எளிது. தவிர, பொருட்களை தனித்தனியாக பத்திரமாக எடுத்துச் செல்வதற்கான பிரத்யேக அறைகள் கொண்டதாகவும் இருக்கும்.

Most Read Articles
English summary
Bentley is working hard on developing its new SUV for 2016. The SUV is expected to cost $2,00,000 competing against likes of Porsche Cayenne and Range Rover. Bentley promises their SUV will be more luxurious than anything on offer currently.
Story first published: Wednesday, February 26, 2014, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X