ஃபியட் அபார்த் ஆலையை கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்க்கும் வசதி!

By Saravana

இத்தாலியின் டூரின் நகரிலுள்ள ஃபியட் அபார்த் ஆலையை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அபார்த் பிராண்டு ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. அந்த ஆலையில் இருக்கும் பல்வேறு பிரிவுகளை நேரடியாக கண்டுகளிக்கும் உணர்வை இது வழங்குகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் அபார்த் 500 கார் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அபார்த் ரசிகர்களுக்கு இந்த வாய்ப்பு மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

அபார்த் ஆலையில் கார் தயாரிப்புக்கான பல்வேறு பிரிவுகளை இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் காண முடியும். பெயிண்ட் ஷாப் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் காண முடியும்.

விண்டேஜ் அபார்த் கார்கள்

விண்டேஜ் அபார்த் கார்கள்

இந்த தொழிற்சாலையில் இருக்கும் மியூசியம் மற்றும் அதில் நிறுத்தப்பட்டிருக்கும் அரிய அபார்த் கார்களையும் காணும் வாய்ப்பை பெறலாம்.

நிறுவனர் அலுவலகம்

நிறுவனர் அலுவலகம்

அபார்த் நிறுவனர் கார்ல் அபார்த் அலுவலகத்தையும் ரசிகர்கள் காணும் வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

குறிப்பிட்ட இடத்தை சொடுக்கி, அதனை உருப்பெருக்கி பார்க்கும் வசதியும் இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் வழங்கியுள்ளனர்.

நீங்களும் பார்க்கலாம்...

நீங்களும் பார்க்கலாம்...

அபார்த் ஆலையை கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
With Fiat all set to bring Abarth into the country, its well-heeled fans will look forward to laying their hands on these small and pricey, but extremely quick machines. Ever wondered what it's like inside the Officine Abarth HQ in Turin though? It's rather nice, as you will discover when you take the Abarth Virtual Tour.
Story first published: Tuesday, October 21, 2014, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X