ஏரோமொபில் பறக்கும் காரின் வெர்ஷன் 3.0 அறிமுகம்!

By Saravana

உலகின் முதல் பறக்கும் கார் என்ற பெருமையுடன் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் ஏரோமொபில் பறக்கும் காரின் புதிய புரோட்டோடைப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏரோமொபில் வெர்ஷன் 3.0 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடல் தயாரிப்பு நிலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டது. இந்த பறக்கும் காருக்கு சமீபத்தில் கிடைத்திருக்கும் மிக முக்கிய அங்கீகாரம் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


வியன்னாவில் அறிமுகம்

வியன்னாவில் அறிமுகம்

வியன்னாவில் நடந்து வரும் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான பயனீர்ஸ் ஃபெஸ்டிவல் என்ற கண்காட்சியில் இந்த புதிய வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெர்ஷன் 3.0 மாடலின் நோக்கம்

வெர்ஷன் 3.0 மாடலின் நோக்கம்

இந்த புதிய புரோட்டோடைப் மாடல் சோதனைகளுக்காக தயாரிக்கப்பட்டது. எனவே, தயாரிப்பு நிலை மாடலாகவே இதனை கூறலாம். மேலும், சோதனைகள் நடத்துவதற்கும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் இந்த மாடலை வெளியிட்டுள்ளனர்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

கடந்த ஒரு மாதமாக இந்த புதிய வெர்ஷன் இறுதிக் கட்ட சோதனைகளில் இருந்து வருகிறது. மேலும், இந்த புதிய பறக்கும் காருக்கு ஸ்லோவோக்கிய நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் கார் மற்றும் சிறிய விமான வகைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தரக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருப்பதும் ஏரோமொபில் நிறுவனத்துக்கு சாதகமானதாக கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரின் பாடி ஷெல், இறக்கைகள், சக்கரங்கள் ஆகியவை மிக உறுதியான பொருட்கள் கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும், சிறப்பாக இருக்கும்.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அவசர காலங்களில் பாரசூட் மூலம் வெளியேறும் வசதி, ஆட்டோபைலட் சிஸ்டம் மற்றும் விமானவியல் சாதனங்கள் இந்த பறக்கும் காரில் பொருத்தப்பட்டிருக்கும்.

பார்க்கிங் வசதி

பார்க்கிங் வசதி

இந்த கார் லிமோசின் மற்றும் பெரிய செடான் கார்களை பார்க்கிங் செய்யும் இடங்களில் பார்க்கிங் செய்ய முடியும். எனவே, நகர்ப்புறத்தில் பயன்படுத்தும் எளிதாக இருக்கும் என்று ஏரோமொபில் தெரிவித்துள்ளது.

சாதாரண பெட்ரோல்

சாதாரண பெட்ரோல்

சாதாரண பெட்ரோலில் இயங்கும் என்பதால், கார்களை போன்று எங்கு வேண்டுமானாலும் பெட்ரோல் நிரப்பலாம்.

ஈஸி டேக் ஆஃப்

ஈஸி டேக் ஆஃப்

இந்த காரின் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட இறக்கைகள் மூலம் இதனை குறைந்த தூர ஓடுபாதையில் டேக் ஆஃப் செய்ய முடியும்.

Most Read Articles
English summary
The AeroMobil 3.0 prototype was premiered today at the Pioneers Festival in Vienna. The roadster-cum-light-aircraft is being tested to refine final performance and features.
Story first published: Thursday, October 30, 2014, 9:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X