உலகின் மிக பாதுகாப்பான காராக வரும் புதிய வால்வோ எக்ஸ்சி90!

By Saravana

உலகிலேயே மிக பாதுகாப்பான கார் மாடல்களை வழங்கும் நிறுவனம் வால்வோ என்பது தெரிந்ததே. இந்த பெயரை தக்க வைக்கவும், கார் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இன்னும் ஒரு படி மேலே போகும் விதத்தில் அடுத்த தலைமுறை எக்ஸ்சி90 எஸ்யூவியை வால்வோ களமிறக்குகிறது.

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எக்ஸ்சி90 எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வால்வோ வெளியிட்டிருக்கிறது. இரண்டு விதமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இந்த புதிய எஸ்யூவியை உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு எஸ்யூவியாக மாற்ற உள்ளதாக வால்வோ குறிப்பிடுகிறது.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அந்த இரு முக்கிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ரன் ஆஃப் இன்சிடென்ட்ஸ்

ரன் ஆஃப் இன்சிடென்ட்ஸ்

ரன் ஆஃப் இன்சிடென்ட்ஸ் என்ற புதிய பாதுகாப்பு வசதி மூலம் மோசமான வானிலை மற்றும் ஓட்டுனர்களின் தவறுகளால் கார் கட்டுப்பாட்டை இழக்கும்போதும், சாலையோர பள்ளத்தில் கவிழும்போதும் காரில் இருக்கும் பயணிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக செயல்படும். விபத்து ஏற்படும் நிலையில், சீட் பெல்ட்டுகளை சரியான விதத்தில் இறுக்கிக் பயணிகளை பாதுகாக்கும். கார் விபத்துக்குள்ளாகி நிற்கும் வரை பயணிகளை சீட் பெல்ட்டுகள் மூலம் காயமடையாத வகையில் பாதுகாக்கும். இதன்மூலம், பயணிகளுக்கு தண்டுவடங்களில் ஏற்படும் பாதிப்புகள், காயங்களை வெகுவாக குறையும் என வால்வோ தெரிவிக்கிறது.

ஜங்ஷன் பிரேக்

ஜங்ஷன் பிரேக்

சந்திப்புகளை கடக்கும்போது குறுக்கே வரும் வாகனங்களை கண்டறிந்து காரை நிறுத்திவிடும். மேலும், பின்னால் வரும் வாகனங்களுக்கும் எச்சரிக்கை தரும் விதத்தில் ஹசார்டு விளக்குகளை ஒளிரவிடும். மேலும், பயணிகளின் சீட் பெல்ட்டுகளும் சரியான விதத்தில் இறுக்கிக் கொள்ளும். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் இதேபோன்ற வசதி இருந்தாலும், பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கும் வசதி இந்த புதிய காரில் வர இருக்கிறது.

ரோல்ஓவரை தவிர்க்கும் வசதி

ரோல்ஓவரை தவிர்க்கும் வசதி

அதிவேகத்தில் ரோல்ஓவர் எனப்படும் கார் பேலன்ஸ் இழந்து உருளும் நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோல்ஓவர் ஆவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக காற்றுப்பைகளை விரிவடைய செய்யும்.

ஆட்டோமேட்டிக் பிரேக்கிங்

ஆட்டோமேட்டிக் பிரேக்கிங்

நகர்ப்புறங்களில் செல்லும்போது காருக்கு அருகில் அல்லது எதிரில் அபாயகரமான தூரத்தில் வரும் வாகனங்கள், பாதசாரிகளை கண்டறிந்து தானியங்கி பிரேக் போடும் வசதியும் உள்ளது. இதற்காக, இந்த காரில் பிரத்யேக பகலிரவு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

சாலை எச்சரிக்கை குறியீடுகளை தெரிவிக்கும் வசதி, கண்ணுக்கு புலப்படாத பகுதியிலிருந்து வரும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் வசதி, வழித்தடம் மாறுவது குறித்து எச்சரிக்கும் வசதி, ஆட்டோமேட்டிக் பார்க்கிங், நகர்ப்புறத்தில் குறைந்த வேகத்தில் செல்வதற்கான ஆட்டோமேட்டிக் டிரைவ் ஆப்ஷன் போன்ற ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். இந்த கார் ஹைபிரிட் மாடலிலும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 Volvo cars offer the most comprehensive and technologically sophisticated standard safety package available in the automotive industry. Volvo's XC90 will be one of the safest cars in the world with its run-off road protection technology and auto brake at intersections. 
Story first published: Thursday, July 24, 2014, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X