இனி டொயோட்டா கார்களை பார்க்கிங் செய்வது எளிதாக இருக்கும்!

By Saravana

கார்களை எளிதாக பார்க்கிங் செய்வதற்கான புதிய சாதனத்தை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. Intelligence Clearance Sonar (ICS) என்ற இந்த புதிய சென்சார் தொழில்நுட்பம் மூலம் காரை சுற்றிலும் இருக்கும் பொருட்கள் மற்றும் பிற வாகனங்களை துல்லியமாக கண்டறிந்து பார்க்கிங் செய்ய முடியும்.

திரை மூலமாக பார்த்தும் காரை பார்க்கிங் செய்யும் வசதியும் இருக்கும் என்பதால், காரை பார்க்கிங் செய்யும்போது ஏற்படும் சிரமங்கள் குறையும் என்பதோடு, பாதுகாப்பும் மேம்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் டொயோட்டா கார்களில் இந்த புதிய பாதுகாப்பு சாதனத்தை ஆப்ஷனலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Toyota ICS

இந்த புதிய சாதனம் கொண்ட கார்கள் பார்க்கிங் செய்யும்போது பிற வாகனங்களுடன் மோதும் நிலை ஏற்பட்டால் எச்சரிக்கும் என்பதுடன், அவசர நிலையில் தானியங்கி பிரேக் பிடித்து காரை நிறுத்திவிடும். மேலும், நெருக்கடியான பார்க்கிங் பகுதிகளில் எளிதாக பார்க்கிங் செய்வதற்கு ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கும்.

இந்த புதிய சாதனத்தின் மூலம், பேரலல் பார்க்கிங் செய்வதற்கான இடத்தை பற்றிய தகவலை வழங்குவதோடு, பார்க்கிங் செய்வதற்கும் உதவி புரியும். இந்த புதிய சாதனம் டொயோட்டா கார்களின் பாதுகாப்பை வெகுவாக மேம்படுத்தும் ஒரு சாதனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Toyota, the Japanese car manufacturer has improved its Intelligence Clearance Sonar (ICS) technology by adding a new viewing mode to its Panoramic View Monitor.
Story first published: Wednesday, November 26, 2014, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X