இங்கிலாந்து போலீசில் ஏரியல் ஆட்டம் ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பான டிரைவிங் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்வதற்காக, இங்கிலாந்து போலீசாருக்கு புதிய ஏரியல் ஆட்டம் 3.5ஆர் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

துபாய் போலீசார் விலையுயர்ந்த கார்களை வாங்கி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தி வரும் நிலையில், அதுபோன்று இந்த புதிய கார் பயன்படுத்தமாட்டாது என்று இங்கிலாந்து நாட்டின் அவோன் மற்றும் சோமர்செட் போலீசார் தெரிவித்துள்ளனர்.


விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

இங்கிலாந்தில், மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பான பயணம் குறித்து நடத்தப்படும் பிரச்சாரங்களின்போது இந்த புதிய ஏரியல் ஆட்டம் 3.5ஆர் ஸ்போர்ட்ஸ் கார் பயன்படுத்தப்பட உள்ளது.

போலீஸ் உடுப்பு

போலீஸ் உடுப்பு

அவோன் சோமர்செட் போலீசாரின் மஞ்சள் மற்றும் நீல நிற வண்ணத்தில் இந்த புதிய கார் பெயிண்ட்டிங் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் உள்ள ஏர் இன்டேக் மேல்புறத்தில் போலீசாரின் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஏரியல் ஆட்டம் 3.5ஆர் காரில் 3.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 350 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 612 கிலோ எடையுடைய இந்த காரில் சாத்தேவ் 6 ஸ்பீடு சீக்குவன்ஷியல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடும் திறன் படைத்த இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். டாப் ஸ்பீடை வெறும் 6 நிமிடங்களில் தொட்டுவிடும்.

 உயிரிழப்புகள் அதிகம்

உயிரிழப்புகள் அதிகம்

இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்தில் மோட்டார்சைக்கிளின் பங்கு வெறும் 1 சதவீதம்தான். ஆனால், மொத்த சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் பங்களிப்பு 25 சதவீதம். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது என அவோன் சோமர்செட் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
English summary
The Dubai police force may have a lot of expensive cars, but one car they do not have is the Ariel Atom. Easily the most ridiculous police car in the world, more so than the former's Bugatti Veyron.
Story first published: Saturday, June 7, 2014, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X