'கேப்டன்' வரிசையில் புதிய டிரக்கை அறிமுகம் செய்த லேலண்ட்!

By Saravana

கேப்டன் என்ற புதிய வரிசையில் முதலாவது டிரக் மாடலை அசோக் லேலண்ட் அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விளம்பர தூதரான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மஹேந்திர சிங் டோணி இந்த புதிய டிரக்கை அறிமுகம் செய்தார்.

இந்த புதிய டிரக் மாடல் ரூ.24 லட்சம் முதலான விலையிலிருந்து கிடைக்கும். இதுகுறித்து அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் கே தாசரி கூறியதாவது," கேப்டன் வரிசையில் நடுத்தர மற்றும் கனரக டிரக்குகள் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆண்டு 18 புதிய டிரக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.

New Leyland Truck

இந்த புதிய டிரக்குகள் எங்களது சொந்த தயாரிப்பில் உருவாகின்றன. இருப்பினும், கேபின் டிசைன் இத்தாலிய நிறுவனத்துடனும், கட்டமைப்பு பொறியியலுக்காக இங்கிலாந்து நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்துள்ளோம்.

இந்த புதிய பிராண்டு டிரக்குகளுக்காக ரூ.700 கோடி வரை முதலீடு செய்யப்படும். உள்நாடு மட்டுமின்றி மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Hinduja flagship firm Ashok Leyland has launched new captain range truck yesterday. The company plans to launch up to 18 different types of trucks this year under its new brand for commercial vehicles, 'Captain'.
Story first published: Tuesday, January 7, 2014, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X