ஆகஸ்ட் 7ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய ஆடி ஏ3 கார்!

By Saravana

அடுத்த மாதம் 7ந் தேதி புதிய ஆடி ஏ3 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக குறைவான விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஆகிய மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது போட்டியாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிறந்த இடவசதி

சிறந்த இடவசதி

விலை அடிப்படையில் போட்டி மாடல்களை ஒப்பிடும்போது இந்த புதிய கார் சிறந்த இடவசதி கொண்டதாக இருக்கும்.

 எஞ்சின்கள்

எஞ்சின்கள்

ஏ4 செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. பெட்ரோல் மாடலில் 180 பிஎஸ் பவரை அளிக்கும் 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சினும், டீசல் மாடலில் 143 பிஎஸ் பவரை அளிக்கும் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.26 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.23 லட்சம் முதல் ரூ.28 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 உலகின் சிறந்த கார்

உலகின் சிறந்த கார்

இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் என்ற விருதை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. இதுமட்டுமல்ல, அமெரிக்க நெடுஞ்சாலை காப்பீட்டு கழக அமைப்பு(IIHS) நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டாப் சேஃப்டி பிக்+ என்ற அதிகபட்ச மதிப்பீட்டை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. மொத்தம் 5 விதமான கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு இந்த புதிய கார் உட்படுத்தப்பட்டது. இது ஆடியின் விற்பனைக்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சங்கள்.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

அவுரங்காபாத்திலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், இந்த புதிய காரை மிக சவாலான விலையில் களமிறக்க ஆடி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #audi #a3 #four wheeler #ஆடி #ஏ3
English summary
According to reports, Audi to be launched the new A3 sedan in India by 7th August. 
Story first published: Monday, July 14, 2014, 9:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X