ஆடியின் புதிய டிசைன் கான்செப்ட்... புதிய மாடல்களில் பிரதிபலிக்கும்!

By Saravana

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி கார்களின் டிசைனில் பெரிய மாற்றங்களை காண முடியவில்லை. இந்த நிலையில், மாற்றத்திற்கான நேரத்தை உணர்ந்து கொண்டு புத்தம் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்ட கார் கான்செப்ட்டை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது ஆடி கார் நிறுவனம்.

ஆடி புரோலோக் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அசத்தலான கான்செப்ட் மாடல்தான் எதிர்கால ஆடியின் உயர்வகை செடான் கார்களின் டிசைனில் பிரதிபலிக்கும். இந்த புதிய கான்செப்ட் காரின் படங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆடி கார்கள் எந்த மாதிரி மாற்றமடைய வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான இந்த கான்செப்ட் மாடலின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய தலைமை டிசைனர்

புதிய தலைமை டிசைனர்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திலிருந்து தற்போது ஆடி கார் நிறுவனத்தின் புதிய தலைமை டிசைனராக பொறுப்பேற்றிருக்கும் மார்க் லிக்டேதான் இந்த காரின் டிசைனில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது உள்ள ஆடி கார்களிலிருந்து எளிதில் வித்தியாசப்படும் வகையிலும், கவர்ச்சியாக இருக்கும் வகையிலும் இந்த காரை டிசைன் செய்துள்ளார்.

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

முந்தைய ஆடி மாடல்களிலிருந்து வேறுபட்ட முகப்பு, லேசர் ஹெட்லைட்டுகள், சரிவக வடிவிலான முகப்பு கிரில் போன்றவை முக்கிய டிசைன் அம்சங்கள். ஆனால், சட்டென அஸ்டன் மார்ட்டினையும் நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.

 இப்ப ஆடிதான்

இப்ப ஆடிதான்

முன்பக்க டிசைன் அஸ்டன் மார்ட்டினை நினைவூட்டினாலும், பக்கவாட்டில் பார்த்தால் பக்காவாக ஆடி என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. முன்புறம் நோக்கி மெதுவாக எழும் கூரை, அதிவேக படகுகளை நினைவூட்டும் பின்புற டிசைன், புதிய டிசைனிலான 22 இஞ்ச் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்சுகள் போன்றவை இந்த காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

அசத்தும் அழகு

அசத்தும் அழகு

முன்புறத்துக்கும், பக்கவாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரும் கார் டிசைனர்கள் பின்புறத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்ற அதிருப்தி இருந்து வருகிறது. ஆனால், புரோலோக் கான்செப்ட்டின் பின்புறத்தை மிக மிக அழகாகவே டிசைன் செய்துள்ளனர். எல்இடி டெயில்லைட்டுகள், வித்தியாசமான டிஃபியூசர் போன்றவையும் அழகு சேர்க்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

தற்போது உள்ள ஆடி கார்களின் இன்டிரியலிருந்து முற்றிலும் மாறுபட்ட டிசைன் கொண்டதாக புரோலோக் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி ததும்பும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சென்டர் கன்சோர்ல் போன்றவை கொடுக்கப்ப்டுள்ளன. மேலும், பல நவீன வசதிகளை கொண்டிருக்கும். ஓட்டுனர், பயணிகள் உள்ளே அமர்ந்ததும், ஸ்மார்ட்போன் மூலம் அடையாளம் கண்டு ஏசியை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இருக்கை அமைப்பை அட்ஜெஸ்ட் செய்தல், செல்லும் இடத்தை சாட் நவ் நேவிகேஷன் சிஸ்டத்தில் முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணி தேர்வு செய்து செல்ல முடியும்.

பவர்

பவர்

இந்த கான்செப்ட் மாடல் 605 எச்பி பவர் கொண்டதாகவும், 0- 100 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டும் என்று ஆடி தெரிவித்துள்ளது. இந்த புதிய கார் கான்செப்ட் தயாரிப்புக்கு செல்லுமா என்பது குறித்து ஆடி தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த கான்செப்ட்டின் டிசைன் எதிர்கால மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாடல்கள்

எந்தெந்த மாடல்கள்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஆடி ஏ8, ஏ7 மற்றும் ஏ6 கார்கள் இந்த புதிய புரொலோக் கான்செப்ட் மாடலின் அடிப்படையிலானதாக இருக்கும் என்றும், இதற்கு நிர்வாகம் அனுமதி கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Audis have looked more or less the same for at least a decade. And while they display a solid design language with clean, inoffensive lines, maybe it's time they get a shot of long overdue personality. And that's just what their latest reveal possesses in the striking Audi Prologue concept.
Story first published: Friday, November 21, 2014, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X