8.5 லட்சம் ஆடி ஏ4 செடான் கார்களுக்கு ரீகால் அறிவிப்பு!

By Saravana

ஏர்பேக் சாஃப்ட்வேர் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, 8.5 லட்சம் ஆடி ஏ4 சொகுசு செடான் கார்களுக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆடி ஏ4 செடான் கார்களில் ஏர்பேக் விரிவடைவதில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மோதலை உணர்ந்து கொண்டு ஏர்பேக்கை விரிவடையச் செய்யும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் பிரச்னைதான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Audi A4 Car

இதையடுத்து, பிரச்னை இருப்பதாக கருதப்படும் ஏ4 கார்களை திரும்ப அழைக்க ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கார்களில்தான் இந்த பிரச்னை முதலில் கண்டறியப்பட்டதுடன், உடனடியாக சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து, சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 2.50 லட்சம் ஏ4 கார்கள் மற்றும், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 1.02 லட்சம் கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. எஸ்டேட் மற்றும் எக்ஸ்டென்டட் வீல் பேஸ் ஏ4 மாடல்களில் இந்த பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2013,2014 மற்றும் 2015ம் ஆண்டு ஏ4 கார் மாடல்களில் இந்த பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Audi has detected a potential problem and have recalled 8,50,000 units of their premium sedan, the A4. The reason is the airbag for models built after 2012. The problem is with Audi's own software, that might not allow the airbag to deploy in case of a crash.
Story first published: Friday, October 24, 2014, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X