மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பிலிப்பைன்ஸின் முதல் சூப்பர் கார்!

By Saravana

உலகின் சில நாடுகள் மட்டுமே சூப்பர் கார் தயாரிப்பில் களம் கண்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தயாரிப்புகள் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

தற்போது ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சூப்பர் கார்களை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸ் நாடும் இணைய இருக்கிறது. அரிலியோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய சூப்பர் காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

/strong>.

 மாணவர்கள் டீம்

மாணவர்கள் டீம்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெவின் ஃபேக்டர் மற்றும் பிரென்டன் அரிலியோ ஆகிய இரு பொறியியல் துறை மாணவர்கள் இந்த காரை தயாரித்துள்ளனர். 21 வயதேயாகும் இந்த மாணவர்கள் உருவாக்கிய இந்த சூப்பர் கார் அனைவரையும் அசத்தும் அம்சங்களை கொண்டுள்ளது.

கார்பன் ஃபைபர் பாகங்கள்

கார்பன் ஃபைபர் பாகங்கள்

இந்த காரின் சில முக்கிய பாகங்கள் கார்பன் ஃபைபரால் ஆனது. பெரும்பாலான பாகங்கள் ஃபைபர் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் டிசைன் ஃபெராரியை நினைவுப்படுத்துகிறது. இத்தாலிய சூப்பர் கார்களின் தாக்கம் அதிகமிருக்கிறது.

 அம்சங்கள்

அம்சங்கள்

பலவித வண்ணங்களில் வெளிவர இருக்கும் இந்த புதிய சூப்பர் கார் ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். வேறுபட்ட டிசைன் கொண்ட அலாய் வீல்கள், இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மிட்சுபிஷியின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 4ஜி63டி எஞ்சின் அல்லது ஹோண்டா பி16ஏ வி- டெக் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்ட ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதன் செயல்திறன் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 டிசைன்

டிசைன்

பின்புற டிசைன் முற்றிலும் பிரத்யேகமாக இருக்கிறது. பூமராங் வடிவ பிரேக் லைட், சிறிய ஸ்பாய்லர், நடவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒற்றை எக்ஸ்சாஸ்ட் போன்றவை கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்முறை முயற்சியிலேயே மாணவர்கள் சிறப்பானதொரு டிசைனை வழங்கியிருக்கின்றனர்.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 10 கார்களை மட்டுமே மனித ஆற்றலின் துணையுடன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.26.81,028 விலையில் விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், காரின் செயல்திறன் விபரங்கள் வெளியான பின்பே இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பு தெரியவரும்.

Most Read Articles
English summary
Now joining the likes of Ferrari, Lamborghini, Mercedes-Benz, Porsche, Noble, Aston Martin, Koenigsegg and many more is the Aurelio. The new supercar Aurelio is made in the Philippines and is the very first from the country.
Story first published: Monday, July 21, 2014, 9:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X