லிட்டருக்கு 37 கிமீ மைலேஜ் தருமாம் பஜாஜ் ஆர்இ60... வாவ் வாவ் வாவ்!

By Saravana

குவாட்ரிசைக்கிள் ரகத்தில் முதலாவதாக வர இருக்கும் பஜாஜ் ஆர்இ60 வாகனத்தின் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிலையை எட்டிவிட்ட இந்த புதிய வாகனம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

மத்திய அரசின் அனுமதிக்காக தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் காத்திருக்கிறது. தனி நபர் பயன்பாட்டுக்கு இல்லாமல், வர்த்தக ரீதியில் மட்டுமே பயன்படுத்துவதற்கு அனுமதி தரப்பட உள்ளது. இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ஆர்இ60 வாகனத்தின் படங்களையும், அதனுடன் சேர்த்து சில கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய குவாட்ரிசைக்கிள் வாகனத்தில் ட்ரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பத்திலான 216சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும். கியர் லிவர் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லத்தக்க திறன் கொண்டதாக இருக்கும்.

 மாடல்கள்

மாடல்கள்

பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் மூன்றுவிதமான மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 37 கிமீ மைலேஜையும், ஒரு கிலோமீட்டருக்கு 60 கிராம் கார்பனையும் வெளிப்படுத்தும்.

ஆட்டோரிக்ஷாவுக்கு குட்பை!

ஆட்டோரிக்ஷாவுக்கு குட்பை!

மூன்றுசக்கர ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு மாற்றாக இந்த புதிய குவாட்ரிசைக்கிள் வாகனம் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
The quadricycle segment has still not been opened by the government, but it is now closer than ever to being formally announced and is likely to happen this year. Meanwhile, Bajaj Auto, the only company with a fully functional quadricycle has been waiting patiently to release its product in the market for several months now.
Story first published: Tuesday, February 11, 2014, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X